உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 33.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




56

இந்தியால் தமிழ் எவ்வாறு கெடும்?

அது முழுவிடுதலை யடையும். இந்தி தமிழ்நாட்டுக்குள் புகுந்ததற் கும், ஏற்கெனவே இங்கு ஆரியம் வேரூன்றி யிருந்தமையே கர

கரணியம்.

ஆரிய அடிமைத்தனத்தை நீக்குவதற்குக் கடவுள் மறுப்பான மதவொழிப்பே வழியெனக் கண்டார் ஈ. வெ.ரா. பெரியார்; கடவுள் வழிபாட்டுத் தனித்தமிழே வழியெனக் கண்டார் மறைமலையடிகள். கடவுள் நம்பிக்கையர் பெரும்பான்மையரா யிருப்பதனாலும், தமிழர் கண்ட மதத்தை ஆரியமென விலக்கிவிடுவதனால் ஆரியர்க்கே உயர்வு ஏற்படுவதனாலும், பகுத்தறிவிற் கொவ்வாத வீண் சடங்குகளையும் மூடநம்பிக்கைகளையும் பழக்கவழக்கங் களையும் சிறுதெய்வ வணக்கங்களையும் மட்டும் விலக்கி, தனித்தமிழில் கடவுள் வழிபாடு நடத்துவதே, தெய்வ நம்பிக்கைத் தமிழர்க்குத் தக்கதாம்.

ஆரியம் முந்தி யருந்தமிழைத் தாழ்த்தியதால் நேரெதிர் இந்திவந்து நின்றதுகாண் ஆரியம் இந்தி யகல வழிபாடு

சீரிய செந்தமிழிற் செய்.

ஓரடியாய்

இந்தியைப் புகுத்த இந்தியார் கூறும் ஏதுக்களின் போலித்தன்மை

இந்தி வெறியாளர் இந்தியைப் பொதுமொழியாக்கற்குக் கூறும் ஏதுக்கள் அத்தனையும் பொருளற்ற போலிகளே. அவர் கூற்றும் அவற்றிற்கு மாற்றும் வருமாறு:

(1) இந்தியா தொன்றுதொட்டு ஒரு நாடென்பது.

இந்தியா இன்றும் பன்னாடே. கூட்டாட்சியால்மட்டும் அது ஓர் ஒன்றியம் (Union) ஆகும்.

(2) ஆங்கிலேயன் இந்தியாவை அடிமைப்படுத்தினான் என்பது. அறுநூறு நாடுகொண்ட இந்தியாவை ஓராட்சிப்படுத்தி அறிவியற் கல்வியால் இந்தியரை உயர்த்தி விடுதலையுந் தந்தவன் ஆங்கிலேயனே. ஆதலால் அவன் மீட்பனே யன்றி அடிமைப்படுத்தியல்லன்.

குணநாடிக் குற்றமு நாடி யவற்றுள் மிகைநாடி மிக்க கொளல்

22

(3) பேராயமே விடுதலை வாங்கித் தந்தது என்பது.

(குறள். 504)

ஆங்கிலராட்சி இந்திய முன்னேற்றத்திற்கு இன்றியமை யாததாகவே யிருந்தது. இந்தியத் தன்னாட்சி எல்லாக் கட்சிக்கும் பொதுவே. பேராயம் ஆங்கிலரைச் சற்று முந்தி வெளியேற்றிவிட்டதால் பல்வேறு தீமைகளே விளைந்

துள்ளன.