உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 33.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பல்வேறு செய்திகள்

57

(4) அரசியலமைப்பில் இந்தி பொதுமொழியாகக் குறிக்கப் பட்டுள்ளது என்பது.

(5)

அரசியலமைப்பில் தக்கோர் பலர் கலந்துகொள்ள வில்லை. அதனாற் பல தவறுகள் நேர்ந்துள்ளன. மாந் தனுக்குச் சட்டமே யன்றிச் சட்டத்திற்கு மாந்தனல்லன் ஆதலால் தவறுகளைத் திருத்துவதே அறிவுடை மாந்தனுக்கு அழகாம்.

இந்தி பெரும்பான்மை மொழியென்பது. இந்தி

பெரும்பான்மை மொழியன்று. 44 கோடி இந்தியருள் 12 கோடி இந்தியார் பெருபான்மையரல்லர்.

(6) இந்தி இந்திய மொழி என்பது.

ஆங்கிலமும் ஆங்கில இந்தியர் தாய்மொழியாயிருப்ப தால் இன்று இந்திய மொழியே.

(7) ஆங்கிலம் மக்கள் மொழியாக முடியாது என்பது.

இந்தியும் இந்தி பேசா மக்கட்கு, சிறப்பாகத் தமிழர்க்கு, அயன்மொழியாதலால் மக்கள் மொழியாக முடியாது. (8) இந்தியாவிற்கு ஒரு பொது மொழி தேவை என்பது.

ஆங்கிலம் ஏற்கெனவே இருநுற்றாண்டுகளாக இந்தியப் பொது மொழியாய் இருந்துவருவதால், இன்னொரு பொது மொழி தேவை யில்லை.

(9) இந்தி வளர்ச்சிபெறின் ஆங்கிலத்திற்கு ஈடாகும் என்பது.

ஆங்கிலம்போல் இந்தியும் இந்தியப் பொதுமொழியும் ஆட்சிமொழியும் கல்விமொழியும் ஆகக் கூடும் என்பது பூனை புலியாக மாறும் என்பது போன்றதே.

து

(10) அரசியற் கட்சித் தலைவர் எல்லாருங் கூடி இந்திய மொழிச்சிக்கலைத் தீர்க்க வேண்டும் என்பது.

அந்தந்த நாட்டு மாணவரும் வட்டார மொழிப் புலவருமே மொழிச்சிக்கலைத் தீர்க்கத் தக்கவர். கட்சித்தலைவர் தத்தம் கட்சி வளர்ச்சியையும் தம் பதவியையுமே காப்பதிற் கண்ணாயிருப்பர்; நாட்டுப் பொதுநலத்தை முதன்மையாக நோக்கார். அவருட் பலர் இந்தியாராதலின் இந்திச் சார்பாகவே யிருப்பர்.

(11) இந்தியா முழுதும் ஓரியல் மொழித் திட்டம் இருக்க வேண்டும் என்பது.

நாடுதொறும் மக்களினமும் மொழியும் பண்பாடும் மனப்பான்மையும் வேறுபட்டிருப்பதால், ஒரேவகை