உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 33.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




58

இந்தியால் தமிழ் எவ்வாறு கெடும்?

யான மொழித்திட்டம் இந்தியாவெங்கும் இருப்பது இயல்வதன்று.

(12) எந்த மொழிச்சிக்கல் தீர்வும் இந்தியை நீக்கக் கூடாதென்பது. இது ஒரு முன்முடிபைக் கொள்வதால், இந் நெறிமுறைப் பட்ட தீர்வு உண்மையும் நடுவுநிலையுமான தீர்வாகாது. இந்தி வெறியரும் அவருக்குத் தம் நாட்டைக் காட்டிக் கொடுக்கும் தந்நலக்காரருமே இந் நிலைப்பாட்டை அல்லது யாப்புறவை (நிபந்தனையை) ஏற்றுக்கொள்வர். (13) இந்தியால் ஒற்றுமை உண்டாகும் என்பது.

இந்தியாற் பிரிவினையும் பகையுமே உண்டாகும் என்பதை இற்றை நிகழ்ச்சிகளே தெளிவாகக் காட்டுதல் காண்க.

இந்தி பெரும்பான்மை மொழியா?

இந்திபேசுவார் தொகை

இந்திப் பிரிவு

தொகை

1.

மேலையிந்தி

45 பன்னிலக்கம் (Millions)

2.

கீழை

23

3.

பீகாரி

39

4.

இராசத்தானி

14

121

(12)கோடியே பத்திலக்கம்)

மொத்தம்

இற்றை யிந்திய மக்கள்தொகை 44 கோடியாதலால், 12 கோடி மக்களே பேசும் இந்தி பெரும்பான்மை மொழியாகாது.

இப் பன்னிருகோடி மக்கள் பேசும் 15 இனமொழிகளும், பெரும்பாலும் ஓரினமொழியார்க்கு இன்னோ ரினமொழி விளங்காதவளவு வேறுபட்டுள்ளனவாகவே சொல்லப்படுகின்றது.

சிலர் மேற்காட்டிய நாற்பிரிவோடு, பகாடி என்பதையும் ஐந்தாவதாகச் சேர்ப்பர். அது முந்நடைமொழிகளைக் கொண்டது.

இதை நோக்குமிடத்து, இந்தி வெறியர் இந்தியைப் பெரும் பான் மொழியாகக் காட்டுவதற்கே பல்வேறு இன மொழிகளை ஒன்றாகச் சேர்த்திருப்பது புலனாகும்

இன்று இந்திய ஆட்சிமொழியாக ஆளப்பெறுவது மேலை யிந்தியைச் சேர்ந்த கடிபோலி என்னும் நடைமொழி யென்றும், அது 1853-ல் தில்லி, மீரட்டு, ஆகரா, சகவன்பூர் ஆகிய இடங்களில் மட்டும்