உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 33.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பல்வேறு செய்திகள்

59

வழங்கத் தொடங்கிய வட்டாரமொழி யென்றும், 1891ஆம் ஆண்டு இந்திய மொழியளவையில் அது குறிக்கப்பெறவில்லை யென்றும், (1961ஆம் ஆண்டுக் குடிமதிப்பின்படி அதைப் பேசுவோர் தொகை 8,849,192 என்றும், அது இந்திய மக்கட்டொகை நூற்றுமேனி 2.1 என்றும் கூறுவர்.

இந்தி எங்ஙனம் தமிழும் திரவிட மொழிகளும்போல், ஒரு வகுப்பார் பேச்சு இன்னொரு வகுப்பார்க்கு விளங்காத அளவு வேறுபட்ட பல்வேறு இனமொழிகளையும் நடைமொழிகளையும் கொண்டது என்பதை, 23-1-68-ல் வெளிவந்த 'இந்து'ச் செய்தித்தாளில், ‘பதிப்பாசிரியர்க்குக் கடிதங்கள்' என்னும் பகுதியில், ‘பீகாரிலும் உத்தரப் பைதிரத்திலும் (பிரதேசத்திலும்) இந்தித் திணிப்பு என்னும் தலைப்பின் கீழுள்ள, சிரதாநந்து பந்தே என்னும் பீகார் நாட்டுப் பெருமகனின் கடிதத்தினின்று அறிந்து கொள்ளலாம். அதன் மொழிபெயர்ப்பு வருமாறு:

“ஐய,

"போசபுரி மொழி கீழை உத்தரப் பைதிரத்திலும் மேலைப் பீகாரிலும் மத்தியப் பைதிரத்தின் சில பகுதிகளிலும் உள்ள 61/2 கோடிக்கு மேற்பட்ட மக்களின் தாய்மொழியாகும். ஆனால், போசபுரி மக்களாகிய நாங்கள் எழுத்தறியாமலும் ஏழை நிலைமையிலும் எங்கள் குரல் வலிமையற்றும் இருப்பதால், இந்தி எங்கள் தாய்மொழியாக இந்திவெறியரால் எங்கள்மேற் சுமத் தப்பட்டுள்ளது. நாங்கள் எவ்வளவோ முயன்றும், போசபுரி எந்தப் பள்ளியிலேனும் எந்நிலையிலேனும் கற்பிக்கப்படுவதில்லை. இந்தி வெறியரைத் தலைமையாகக் கொண்ட நாட்டரசுகளால் இந்தி முன்னேற்றத்திற்காக எங்கள் தாய்மொழி நசுக்கப்படுகின்றது.

"செய்தித்தாள்களெல்லாம் இந்திப் பற்றாளர் கட்டிற்குள் ளிருப்பதால், எங்கள் கருத்துகளை வெளியிடுவதில்லை.

"இந்திப் போராடிகளின் நடபடிக்கையை நோக்கினால், இவ் இந்து தேசம் அவர்கட்கே சொந்தமென்றும், பிறமொழி பேசுவாரின் நலத்தைக் கவனிக்க வேண்டுவதில்லை யென்றும் அவர்கள் கருதுவதாகத் தெரிகின்றது. செய்தித்தாள்கள் இந்தியைப் போற்று வாரின் ஆட்சியிலிருப்பதால் உத்தரப் பைதிரம், பீகார், மத்தியப் பைதிரம் முழுதும் இந்தி நாடுகளென்று நம் தாய்நிலத்தின் தென் பாகத்திலுள்ளவர்கள் கருதிக் கொண்டிருக்கிறார்கள். இது உண்மையன்று. இந்தி மண்டலம் என்று சொல்லப்படும் நிலப்பகுதி யில் இந்தியல்லா மொழிகள் எவ்வளவு கேடாக மறைக்கப்படுகின் றன என்பது நம் தென்னாட்டு உடன்பிறப்பு மக்கட்குத் தெரியாது.

6

"போசபுரிமொழியாளராகிய நாங்கள், கீழ்க்காணும் எங்கள் கோரிக்கைகட்குச் சார்பாகத் தங்கள் குரலை யெழுப்புமாறு,