உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 34.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




96

தமிழர் திருமணம் தன்றிச் சட்டையணியாமையாலும், நெசவு, தையல் முதலிய கலைகளும் சிறிது கெட்டன.

சட்டையணிதல் பண்டைக்காலத்து மிருந்தது. அதை விரும்புவோர் கோடைகாலத்தி லில்லாவிட்டாலும் குளிர்காலத்திலாவது அணிந்திருக்கலாம்.

துறவிகள் அருள் காரணமாகவும் உடம்பை ஒடுக்குதற்கும் ஊனுணவை யொழித்து மரக்கறியே உண்டுவந்ததால், இல்லறத்தாரும் அவரைப் பின்பற்றி ஊனுணவை ஒழித்திருக்கின்றனர். இவரே சைவ வேளாளர் எனப்படுவார். இவரைப் பின்பற்றி வேறு சில குலத்தாரும் அண்மையில் ஊனுணவை விலக்கியிருக்கின்றனர். இதை யாம் குற்றமாகக் கூறவில்லை. ஆனால், மரக்கறி யுணவே தூயதென்றும், ஊனுணவு தூயதன்றென்றும் கூறுவதை யாம் ஒப்புக்கொள்ள முடியாது.

ஊனுணவு கொலையுள்ள தென்றால், மரக்கறியுணவும் கொலை

யுள்ளதே.

சில அஃறிணை உயிரி (பிராணி)களுக்கு ஊனே உணவாக இருக் கின்றது. ஊனுணவு குற்றமுள்ளதாயின், அக் குற்றம் கடவுளையே சாரும். 'புலி பசித்தாலும் புல்லை தின்னுமா?' குளிர்நாடுகளில் ஊனுணவு தவிர வேறொன் றும் கிடைப்பதில்லை. குறிஞ்சிநாடுகளில் மக்கட்கு விலங்குணவு இயற்கையா யிருக்கின்றது. கண்ணப்ப நாயனார் பன்றியூனைத் தாமும் தின்று சிவ பெருமானுக்கும் கொடுத்தார்.

துறவறத்திற்குரிய அருள் இல்லறத்தார்க் கிருக்க முடியாது. அதனாலேயே, அருளுடைமை, புலான்மறுத்தல், கொல்லாமை என்ற மூன்றதிகாரங்களையும் துறவறத்தில் வைத்துக் கூறினார் திருவள்ளுவர்.

7

ஊனுணவால் வீரத் தன்மையும் மரக்கறியுணவால் சாந்தத் தன்மையும் உண்டாகும். அரிமா சிறியதாயும் யானை பெரியதாயு மிருந்தாலும், முன்னது பின்னதை எளிதிற் கொன்றுவிடுகின்றது. இதற்கு அவற்றின் ஊனுணவும் மரக்கறியுணவுமே காரணம்: உலகத்தில் ஊனுண்ணாத வீரக்குலத்தார் எங்குமில்லை. இதனாலேயே ஊனுண்டிச்சாலை ஆங்கிலத்தில் மிலிட்டரி ஹோட்டல் எனப்படுகின்றது. வீரம் ஒரு நாட்டுக்காப்பிற்கு இன்றியமையாதது. பண்டைத் தமிழரசரும் பொருநரும் (Soldiers) சிறக்க ஊனுண்டனர். திருவள்ளுவர் அரசியலாராய்ந்தவராதலின், இவ் வுண்மைகளை அறிந்திருந்தார்.

சில உயிரிகள் ஊன்கள் சில கொடிய நோய்கட்குக் சிறந்த மருந்தா யுள்ளன. கல்விக்குரிய உயர்ந்த வகுப்பார் ஊனுணவை விலக்கியதால், உடல்நூல் (Physiology), அக்கறுப்பு நூல் (Anatomy), அறுப்பியம் (Surgery) முதலியன தோன்றற்கும் வளர்தற்கும் இல்லை.

ஊனுணவு பழிக்கப்படுவதால், உயர்ந்த குலத்தார் ஆடு கோழிப் பண்ணைகள் வைத்து, நாட்டின் உணவு வசதியையும் பொருளாதாரத்தையும் பெருக்கவில்லை. தாழ்ந்த குலத்தார்க்கோ பொருளிட வசதியில்லாதிருப்பதுடன், ஊனும் பாலும் அவர் கைபடின் விலையாதற் கிடமில்லாமலு மிருக்கின்றது.