உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 34.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தமிழன் எப்படிக் கெட்டான்?

95

"பிறந்தார் உறுவது பெருகிய துன்பம்" என்றனர் பௌத்தர். "வெறியயர் வெங்களத்து மறிகுள குண்டன்ன மன்னா மகிழ்ச்சி" என்றனர் சமணர். இங்ஙனமே பிற மதத் துறவிகள் சிலரும் கூறினர். பேரின்பம் போன்றே சிற்றின்பமும் கடவுளால் அளிக்கப்பட்டதே. சிற்றின்பம் நுகர்ந்தவரே பேரின்பத்தையும் நன்றாய் உணரமுடியும். அதனால் அவர்க்கு அதன்மேல் விருப்பமுண்டாகவும் இடமுண்டு. இக் கருத்துப்பற்றியே திருச்சிற்றம்பலக் கோவை பாடினார் மாணிக்கவாசக அடிகள். அறவழியில் சிற்றின்பத்தை நுகர்ந்தால் யாதொரு குற்றமுமில்லை மேன்மக்களானும் புகழப்பட்டு மறுமைக்கும் உறுதி பயக்குமாதலின் இக் காமம் பெரிதும் உறுதியுடைத்து என்றார் நக்கீரர்.

சில துறவிகள் செல்வமும் பெண்டிரும் சிற்றின்பத்திற் கேதுவென்று அவரை வரம்பு கடந்தும் பழித்தனர். சிலர் மனித உடம்பையும் மிகமிக இழிவாகக் கூறினர். இவரது கூற்றின்படி நடந்தால் அது ஒருவகைத் தற்கொலையே யாகும். செல்வத்தைப் பழித்ததே தமிழரின் சோம்பலுக்கும் காலந்தவறுந் தன்மைக்கும் காரணமாகும்.

கடவுள் தம் முற்றறிவால் எல்லாப் பொருள்களையும் மனிதன் தன் நன்மைக்கென்று படைத்திருக்க, பன்னாடை போல அவற்றின் நற்கூறுகளை யுணராது. தீக்கூறுகளையே தவறாக உணர்வது கடவுளின் படைப்பிற்கே குற்றங்கூறியதாகும்.

பொருளில்லாவிட்டால் ஒருவன் உயிர்வாழ முடியாது. பெண்டிர் இல்லாவிட்டால் இல்லறம் நடவாது, மக்கள் குலம் அழியும்; உடம்பைப் பேணாவிட்டால் நோய்ப்பட்டு ஒரு வினையுஞ் செய்யமுடியாது, பிறர்க்குப் பாரமாயிருக்க நேரும். அதோடு வீடுபேற்று முயற்சியும் கெடும், பின்பு சாவும் வரும்.

உடம்பின் பயனை நன்றாயறிந்தே,

"உடம்பார் அழியில் உயிரார் அழிவர்

99

திடம்பட மெய்ஞ்ஞானஞ் சேரவு மாட்டார் உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த் தேனே "உடம்பினை முன்னம் இழுக்கென் றிருந்தேன் உடம்பினுக் குள்ளே உறுபொருள் கண்டேன் உடம்புளே உத்தமன் கோயில்கொண் டானென் றுடம்பினை யான்இருந் தோம்புகின் றேனே” என்றார் திருமூல நாயனார்.

உடம்பைப் பேணாமையால், நலவழி (சுகாதாரம்) மருத்துவம், சமையல் முதலிய கலைகள் வளர்தற்கிடமில்லை.

பல துறவிகள் கோவணந் தவிர வேறொன்றும் அணியாமையாலும், இல்லறத்தார் பலர் அவரை மதித்ததனால் தம் உடம்பை வேட்டியால் போர்த்த