உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 34.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




94

தமிழர் திருமணம்

வருதலே இறைவனுடைய முத்தொழில்களில் ஒன்றாகிய

காப்புத்

தொழிலாதலாலும், துறவியை நெடுங்காலம் தாங்குபவன் இல்லறத்தானாதலாலும், உண்மையான துறவு மிக அரிதாதலாலும், இல்லறத்திலும் வீடுபேறு கிட்டுமாதலாலும், துறவறத்தினும் இல்லறம் சிறந்ததெனக் கூறலாம்.

"இல்லற மல்லது நல்லறமன்று"

என்றார் ஓௗவையார்.

"அறனெனப் பட்டதே யில்வாழ்க்கை

என்றார் திருவள்ளுவர்.

99

இல்லறம் துறவறம் ஆகிய இரண்டிற்கும் தனித்தனி சில சிறப்பியல்கள் உண்டு. அவற்றில் அவை ஒன்றையொன்று பின்பற்றுதல் தவறாம். உண்மைத் துறவிகள் பெரும்பாலும் கற்றோராயும் ஆசிரியரா யிருந்தமையால், இல்லறத்தார் அவரை அளவிறந்து பின்பற்றித் தாமுங்கெட்டுப் பிறரும் கெடுவதற்குக் காரணமாய் இருந்திருக்கின்றனர். சில துறவிகளும், சிறப்பாகப் பௌத்த சமணத் துறவிகள், உலகிலுள்ள பலவகை நிலையாமைகளையும் துன்பங்களையும் மிகுத்துக்கூறி, இல்லறத்தார்க்கு உலக வாழ்க்கையில் மிகுந்த வெறுப்பையூட்டி யிருக்கின்றனர். இதுவே கலைவளர்ச்சிக்குப் பெரிதும் தடையாயுள்ளது.

உலகவாழ்க்கை நிலையாததா யிருந்தாலும், இன்றைக்கும் நீண்ட வாழ்வினர் பெரும்பாலும் அறுபதாண்டுகளிருக்கக் காண்கின்றோம். ஒருவன் முப்பதாண்டுக ளிருந்தாலுங்கூட அதற்குள் எத்துணையோ இன்பங்களையும் நுகர(அனுபவிக்கலாம்; காரிங்களையுஞ் செய்யலாம். பரிதிமாற்கலைஞன் என்னும் சூரியநாராயண சாத்திரியார் 35ஆம் ஆண்டில் இறந்து போயினார். ஆயினும் அதற்குள் 80 ஆட்டைப் பருவத்தினரும் செய்திராத பல முயற்சி களையும் தொண்டுகளையும் செய்திருக்கின்றனர்.

وو

"இன்றைக்கிருந்தாரை நாளைக்கிருப்பரென் றெண்ணவோ திடமில்லை அதுபோன்றே இன்றைக்கிருந்தாரை நாளைக்கிரார் என்று எண்ணவும் திடமில்லை.

ஒர் இடத்தில் ஒருவன் இரண்டொரு நாளே குடியிருப்பதாக இருந்தால், அதைச் செவ்வைப்படுத்தமாட்டான். நீடித்திருந்தால் நிலையானதென்று அதைச் சீர்ப்படுத்துவான். அதுபோன்றே உலகம் நிலையில்லதென்று கருதி இடைக் காலத் தமிழர் இம்மைக்குரிய கலைகளிற் கவனஞ்செலுத்தாது, மறுமைக்குரிய மதவாராய்ச்சியிலேயே ஈடுபட்டிருந்திருக்கின்றனர். மேனாட்டினரோ, அங்ஙனமன்றி உலகத்திலுள்ளவரை சிறப்பாய் வாழலா மென்று, இம்மைக்குரிய கலைகளை யெல்லாம் ஆழ ஆராய்ந்து உலக நலமான பல புதுப்புனைவுகளை (Inventions) இயற்றியிருக்கின்றனர். தமிழர் புதிதாகக் கலையாராய்ச்சி செய்யாமலிருந்ததோடு, தம்முன்னோர், பன்னூறாண்டுகளாகப் பயின்றமைத்து வைத்த இசை நாடகம் ஓவியம் முதலிய கலைகளையும் சிற்றின்பத்திற் கேதுவானவை யென்று பெரிதும் அழியவிட்டிருக்கின்றனர்.

உலகத்தில் இன்பமும் ன்பமும் உண்டு

கவனித்தனர் சில துறவிகள்.

உண்டு. ஆயினும் துன்பத்தை மட்டும்