உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 34.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தமிழன் எப்படிக் கெட்டான்?

93

மேலும், ஒருவனுக்கு ஒரு மொட்டைப் பார்ப்பாத்தி எதிர்ப்பட்டால், அவள்மட்டும் அவனுக்கு எதிர்ப்பட்டாள் என்று ஏன் கொள்ளவேண்டும்? அவளுக்கு அவன் அல்லது அவனும் எதிர்ப்பட்டான் என்று ஏன் கொள்ளக்கூடாது?

ஓர் ஊரில் ஓர் அரசனிருந்தான். அவன் ஒரு நாட்காலை ஒரு திட்டிவாசல் வழியாய் வெளியே தெருவை எட்டிப் பார்த்தான். அவ் வாசல் குட்டையா யிருந்ததால், அவன் தலையைத்தட்டி ஒரு காயமும் ஏற்பட்டது. வெளியே ஒரு இரவல(பிச்சைக்கார)ப் பையன் நின்றுகொண்டிருந்தான். அவனைப் பார்த்த தனால்தான் அக் காயம் ஏற்பட்டதென்று, அவ் வரசன் அவனைத் தூக்கிலிடச் சொன்னான். அப்போது அப் பையன், "ஆண்டவனே! தாங்கள் என்னைப் பார்த்ததனால் எனது உயிருக்கே இறுதி வந்துவிட்டதே! இதற்கு தாங்கள் என்ன செய்யப்போகிறீர்கள் என்று கேட்டான். உடனே அரசனுக்கு அறிவு பிறந்து, அவனை விடுதலை செய்துவிட்டான்.

குறியில் அல்லது கணியத்தில் (ஜோசியத்தில்) நம்பிக்கையுள்ள ஒருவன், ஒரு குறி ஒரு காரியத்திற்குத் தடையென்று நினைத்தால், அக் காரியத்தைச் செய்யாதே விட்டுவிடுகிறான்.

"தெய்வத்தா லாகா தெனினும் முயற்சிதன் மெய்வருந்தக் கூலி தரும்

என்றார் தெய்வர் புலவர்.

99

(குறள். )

ஒரு காரியம் ஆகும் ஆகாதென்று முடிவில்தான் சொல்லமுடியும். சில காரியம் ஒரே முயற்சியில் முடியும். சில காரியம் பல முயற்சியில் முடியும். ராபட் புருஸ் ஆறுமுறை தோற்று ஏழாம் முறை வெற்றி பெற்றார்.

ஒரு காரியம் பல முறை முயன்றும் முடியாமற் போனாலும், பட்ட பாட்டிற்குப் பலனில்லாமற் போகாது. குறியில் நம்பிக்கையுள்ள ஒருவன், ஒரு குறியைக் கண்டபின் முயன்றும் ஒரு காரியம் முடியாமற்போனால், அதற்கு அவனது மனத்தளர்ச்சி காரணமாயிருக்கும், அல்லது முயற்சி போதாதிருக்கும், அல்லது குறியல்லாத வேறு காரணங்க ளிருந்திருக்கும். இவ் வுண்மைகளை அறியாமல், ஒரு குறியே காரணமென்று கொள்வது அறியாமையாகும்.

சில சமையங்களில் கலை(Science)யியற்படியோ தெய்வ ஏற்பாட்டாலோ, சில தீக்குறிகள் தோன்றிப் பின்னால் நேரப் போகும் துன்பங்களைக் குறிக்கலாம். அது வேறு செய்தி. இங்குக் கண்டிக்கப்படுவதெல்லாம் முயற்சியழிவிற்குக் காரண மான குறிபார்ப்பே. உண்மையில் நேரப்போகும் துன்பங்களைக் குறிக்கும் குறிகளைக் காணின், இயன்றவரை அத் துன்பங்களை விலக்க முயற்சி செய்ய வேண்டும்; முயன்றும் முடியாதாயின் தெய்வ ஏற்பாடென்று தெரிதல் வேண்டும்.

5. துறவியைப் பின்பற்றல்

மக்கள் வாழ்க்கைமுறை இல்லறம், துறவறம் என இருவகைப்படும். கடவுள் மக்களை ஆனும் பெண்ணுமாகப் படைத்திருப்பதாலும், உலகம் நடந்து