உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 34.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




98

தமிழர் திருமணம்

பெற்றதன்றித் திடுமென்று தோன்றியதன்று. மதத்தினால் எவரையும் நம்பும் சில மதப் பித்தரான தமிழரும் இருந்தனர். மேனாடுகளில் ஆரியரே, ஐந்தாம் பட்டாளத்தாரான ஆரியரால் இவ் விருபதாம் நூற்றாண்டில் ஏமாற்றப் பட்டிக்கும்போது, இருபது நூற்றாண்டுகட்கு முன் திராவிடர் ஆரியரால் ஏமாற்றப்பட்டது வியப்பாகுமா?

குலப்பிரிவினையால் முதலாவது தமிழரின் வலிமை அழிந்தது. ஒரு பெரிய நாட்டைக் கெடுப்பதற்குப் பிரிவினை ஒரு சிறந்த வழி. குலப்பிரிவினை போன்றே மதப் பிரிவினை கட்சிப் பிரிவினைகளாலும் தமிழக்குலம் சிதைக்கப் பட்டுக் கிடக்கின்றது.

குலப்பிரிவினையால் தமிழரின் வீரமும் அழிந்தது. ஒருவன் தன்னினும் மேற்குலத்தானாகக் கருதப்படுகிறவனைக் கண்டவுடன் தன்னைத் தாழ்ந்த வனாக நினைத்துக் கொள்கிறான். அவனுக்கு எப்படி வீரம் பிறக்கும்? தாழ்த்தப் பட்டோரோ தீண்டவும் அண்டவும் பெறாமையால், அவரது வீரம் அறவே அழிந்ததென்றுங் கூறலாம். தீண்டாதவன் ஒருவன் ஒரு பார்ப்பனரைக் காணின் அஞ்சி ஒடுங்குகிறான். அவன் நரம்பு தளர்ந்துவிடுகின்றது. தாழ்த்தப் பட்டோர்க்குத் தீண்டாமையால் வந்த தீமை கொஞ்சநஞ்சமன்று. உயர்குலத்தார் வாழும் அல்லது பயிலும் இடத்தில் குற்றேவலும் கூலிவேலையுங்கூட அவனுக்குக் கிடைப்பதில்லை. ஒரு நீதிமன்றத்தில் அல்லது அலுவலகத்தில் (Office) சேவகன் அல்லது வாயிற்காவலன் வேலை அவனுக்குக் கிடைப்பதும் பெறற்கரும் பேறாயிருக்கின்றது.

சில ஊர்களில், தாழ்த்தப்பட்டோர் அக்கிரகாரத் தெருவழியே செல்லவும், ஊர்க்குளங்களிற் குளிக்கவும், இன்னும் வியப்பாக, மேலாடையும் சட்டையும் அணியவும் விடப்படுவதில்லை. தாழ்த்தப்பட்டோரின் சிறாரைப் பிறகுலச் சிறார் பயிலும் பள்ளிக்கூடங்களிலும் சேர்ப்பதில்லை. இதனாற் கல்வியும் அவர்க் கில்லாது போயிற்று. இத் தீமைகளெல்லாம், விடையூழியரின் (மிஷனரிமாரின்) துணிவாலும், நீதிக்கட்சியினரின் முயற்சியினாலும் நீங்கி வருகின்றது. ஆயினும், இன்னும், தாழ்த்தப்பட்டோர் இந்துக்களாயிருந்த விடத்தும், அவர் சிறார் சில திண்ணைப் பள்ளிக்கூடங்களிலும், திருவாவடு துறை, தருமபுரம் முதலிய இடத்து மடத்துப் பள்ளிகளிலும் சேர்க்கப்படுவதில்லை.

பண்டைக்காலத்தில், பறையருள் ஒரு பிரிவினரான பாணர் இசைத் தொழிலராயிருந்து இசைத்தமிழை வளர்த்துவந்தனர். தீண்டாமையால் பிற்காலத்தில் அவர்க்கு உயர்குலத்தாரிடத்தில் இடங்கிடையாமற் போனதினாலும், பார்ப்பனர் இசைத்தொழிலிற் புகுந்தமையாலும், பாணர்க்குப் பிழைப்புக் கெட்டதுடன் இசைத்தமிழும் மறைந்துபோயிற்று.

வள்ளுவர்க்குரிய கணிய(ஜோதிட)த் தொழிலையும் பார்ப்பனர் கைப்பற்றிக்கொண்டனர்.

மருத்துவம் பண்டைக்காலத்தில் பல அம்பட்டரால் செய்யப்பட்டு வந்தது. சத்திரவித்தை என்னும் அறுப்பு மருத்துவமும் அவர்களுக்குத் தெரிந்திருந்தது.