உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 34.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




104

தமிழர் திருமணம் குலப்பிரிவினை காட்டிக்கொண்டு, சொல்லளவில் அதை மறுப்பது, ஒரு பண்டத்தைக் காக்கை தூக்கிக்கொண்டு போய்விட்டதென்று குழந்தைகளை ஏமாற்றுவதொக்கும்.

பார்ப்பனர் உண்மையில் தங்களைத் தமிழரைப்போலக் கருதித் தமிழையே வளர்ப்பாரானால், அவர்கள் தமிழ்நாட்டை வழிவழி யாண்டாலும் தமிழ்ப் புலவருடைய எதிர்ப்புச் சற்றுமிருக்காது. அதற்கு மாறாகத் தங்களைத் தமிழரென்று சொல்லிக்கொண்டு, ஆரியத்தையே வளர்த்துத் தமிழைத் தளர்ப்பது பொறுக்கத்தக்கதன்று.

சிலர் பார்ப்பனருக்குத்தான் படிப்புத் திறமையுள்ள தென்றும், அதனால் தான் அவர்க்கு அலுவற்பேறென்றுங் கூறுகின்றனர். திறமைபற்றி வேலையாயின், பார்ப்பனர் ஏன் நகரக்காவல் (போலீஸ்), கிளையத்தில் (இலாகாவில்) புகவேண்டும்? அவர் உண்மையில் வீரராயின், படைத்துறையில் (இராணு வத்தில்) ஏன் ஒருவர்கூடச் சேர்வதில்லை. நகர் காவலிலும் தலைவராக மட்டும் ஏன் இருக்க வேண்டும்?

தமிழர்க்கு ஆயிரம் ஆண்டுகளாக உயர்தரக் கல்வி இல்லை. பார்ப்பனரோ ஐயாயிரம் ஆண்டுகளாக வழிவழியாகக் கற்றுக் கல்வியைக் குலத்தொழிலாக்கிக் கொண்டனர். இதனால் சிறிது வேறுபாடுண்டு. தமிழர்க் கரசு உதவியிருப்பின் இரண்டொரு தலைமுறையில் இக்குறை நீங்கிவிடும்.

தமிழ்நாட்டில் நூற்றுக்குத் தொண்ணூறு பேர் தற்குறிகளாயிருப்பவும், சேலம் கோட்டகை (ஜில்லா)யில் மதுவிலக்கென்று, 250 பள்ளிகளைச் சாத்தி மதிவிலக்குச் செய்தது. பெருங்கேடாகும். அதைப் பின்பற்றி, இன்று கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளிக் கோட்டகைகளிலும் 200, 300 ஆகப் பள்ளிகள் சாத்தப்பட்டுள்ளன. ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்குக் கல்வியே அடிப்படை. மேனாடு களில் 100-க்குத் 90-பேர் படித்திருப்பதால்தான், அவர்கள் முன்னேறி வருகின்றனர். அடிமைத்தனமும் அறியாமையும் நீங்க வேண்டிய குடியரசு காலத்தில் நூற்றுக்கணக்கான முன்முறைப்(primary)பள்ளிகளைச் சாத்தி, மக்களைக் குருடாக்குவதும் நூற்றுக்கணக்கான ஆசிரியர்க்கு வேலையில்லாமற் செய்வதும் நன்றன்று. பள்ளிகளில் குறையிருந்தால் திருத்தவேண்டும். முன்முறைக் கல்விக்கும் கட்டாயக்கல்விக்கும் மட்டும் எவ்வளவு செலவானாலும் செலவிடத் தக்கதே. அறியாமை விலக்கே மது விலக்கினும் முற்பட்டுச் செய்ய வேண்டிய சீர்திருத்தமாகும்.

காங்கிரசால் தமிழர்க்கு விளைந்த தீங்குகளில் மிகக் கொடியது எதுவென்றால், பகுத்தறிவைப் பயன்படுத்தாதபடி, கட்டொழுங்கின் (Discipline) புகட்டப்பட்ட வாயடக்கியலாகும். மற்ற என்ன சொன்னாலும் அதன் உண்மையை உணராமலும், காங்கிரசிற்காக எல்லாவற்றையும் இழப்பதென்றும், திராவிட உயர்வுபற்றியதெல்லாம் கைவிடுவதென்றும், ஆரிய உயர்வுபற்றியதெல்லாம் வரவேற்கத்தக்கதென்றும், காங்கிரசு தலைவர் கூறுவதெல்லாம் மறைமொழி (வேதவாக்கு)யென்றும், குருட்டுத்தனமாய்க் காங்கிசைப் பின்பற்றுவது