உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 34.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தமிழன் எப்படிக் கெட்டான்?

103

தனிமொழியைப் பேசுபவர் எங்ஙனம் இந்தியாகிய ஆரியமொழியை ஏற்கமுடியும்? ஆங்கிலத்தினும் அண்மையாயிருப்பதால் மட்டும் இந்தி இனமொழியாகி விடாது. பகைவன் அண்டை வீட்டில் குடியிருப்பதால் மட்டும் நண்பனாகி விடமாட்டான்.

"உடன் பிறந்தார் சுற்றத்தார் என்றிருக்க வேண்டா உடன்பிறந்தே கொல்லும் வியாதி உடன்பிறவா மாமலையில் உள்ள மருந்தே பிணிதீர்க்கும்

ஆமருந்து போல்வாரு முண்டு.

99

தொடர்ந்து ஆரிய மொழியில் தமிழுக்கு விளைந்த கேடு கொஞ்ச நஞ்ச மன்று; அதோடு இந்தியும் வரின் தமிழ் பெருங்கேடுறும் என்பதற்கு ஐயமின்று. ஆங்கிலம் அயன்மொழிகளால் வளர்ந்தது போலத் தமிழும் வளரும் என்று கருதுகின்றனர் சிலர் அவர் அறியார். ஆங்கிலத்திற்கு தமிழ்மொழித் துணை இன்றியமையாதது. தமிழுக்கு அங்ஙனமன்று.

இப்போது வழங்கும் பேச்சுத்தமிழ் அரைத்தமிழே. வடமொழியால் கால் தமிழும் ஆங்கிலத்தால் கால் தமிழும் போய்விட்டன. இனி இந்திவரின், கால் தமிழ்தான் வழங்கும். அதற்கும் அரசியல் தாங்கல் (ஆதரவு) இன்மையால், அதுவும் ஒரு காலத்தில் நீங்கும். மொழியே ஒரு நாட்டு நாகரிகத்தின் கருவூலம். மொழி நீங்கின் நாட்டு நாகரிகமும் நீங்கும்.

6

ஆண்டை வருஷமென்றும், மகிழ்ச்சியைச் சந்தோஷமென்றும், சிவபோற்றி என்பதைச் சிவாய நம வென்றும் அம்மையப்ப வணக்கம் என்பதை நமப்பார்வதீ பதயே என்றும் தாய்நாடே போற்றி என்பதை வந்தேமாதரம் என்றும், புத்தூழி வெளியீட்டகம் என்பதை நவயுகப்பிரசுராலயம் என்றும், நிலுவையைப் பாக்கி என்றும், தாழ்வில்லை அல்லது குற்றமில்ைைல என்பதைப் பர்வாயில்லை யென்றும், குழுவைக் கமிட்டியென்றும், மேற்சட்டையைக் கோட்டு என்றும் அயன் மொழிச் சொற்களைக் கங்குகரையின்றி வழங்கிக்கொண்டு, அவற்றைத் தமிழென நினைப்பது அவலை நினைத்துக்கொண்டு உரலை யிடிப்பதாகு மன்றோ?

தமிழுக்குத் தமிழ்ப் புலவர்களே அதிகாரி. தமிழ்த் தற்காப்புக்காக அவர்கள் ஏதேனும் செய்தால் வேலையிழப்பும் சிறைத்தண்டனையும் நேர்கின்றன. இந் நாட்டில் தமிழர்க்குத் தமிழைப்பற்றிப் பேச உரிமையில்லா விட்டால், இதினும் கொடிய அடிமைத்தனமு முண்டோ?

தேவரும் அசுரரும் சேர்ந்து திருப்பாற்கடல் கடைந்தாலும், தேவர்க்கு மட்டும் அமிழ்தம் தந்ததைப்போல, பார்ப்பனரும் தமிழரும் சேர்ந்து விடுதலைக்குப் பாடுபட்டாலும், முந்தினவர்க்கே பலன் கிடைக்கின்றது. தமிழ் நாட்டில் நூற்றுக்கு மூன்று விழுக்காடுள்ள பார்ப்பனர், நூற்றுக்கு அறுபதிற்கு மேற்பட்ட அரசு அலுவல்களைப் பெற்று வருவதும் தமிழ்நாட்டையே ஆள்வதும், குடியரசுக்கும் தமிழர் உரிமைக்கும் ஏற்றதன்று. குலப்பிரிவினை யுள்ள வரையில் தனித்தொகுதி இருந்துதான் தீரவேண்டும். நடைமுறையில்