உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 34.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




102

தமிழர் திருமணம்

அவர்களுள் ஓரிரு தலைவர்களாவது, மேற்கூறிய குறைகளைத் தாங்கள் திருத்திக்கொள்வதில்லை; தமிழறிஞரோடு தொடர்புகொள்வதுமில்லை. முதலாளியும் தொழிலாளியும் கூடியிருந்தால்தான் தொழில் நடக்கும்; அதுபோல, தலைவரும் தமிழறிஞர்களுங் கூடினால்தான் தமிழ்நாடு முன்னேறும் .

காங்கிரசு. வகுப்புவாரியாய், மக்கள்தொகைக்குத் தக்கபடி, அரசியல் வேலையளிக்கப்பட வேண்டுமென்ற நீதிக்கட்சி யேற்பாட்டினால், தங்களுடைய தலைமை நீங்குவதையறிந்த பார்ப்பனர், தேசியப் போர்வையைப் போர்த்துக் கொண்டு விடாமுயற்சியாய் வேலை செய்ததனாலும், பல வலக்காரங்களைக் கையாண்டதனாலும், கடைசியில், ஆரிய அல்லது வடநாட்டுத் தலைமையுள்ள காங்கிரசுக்கு வெற்றி கிடைத்தது. ஆனால், காங்கிரசு தலைவரான பார்ப்பனர், ஆரிய வெறிகொண்டு நீதிக்கட்சி மேலுள்ள கோபத்தை யெல்லாம் தமிழ் நாட்டின்மேல் காட்டி, அதை ஒரேயடியாய் ஆரிய மயமாக்க வேண்டுமென்று துணிந்ததனால், தக்க தலைவரின்றியும், வறுமைப்பட்டும், சிறுபான்மையராயும், பிழைப்புத் துறையிற் பெரும்பாலும் எதிரிகள் கையில் அகப்பட்டும் இருக்கின்ற ஒருசில தமிழர்க்கும், மானத்துடன் வாழ்வது அது தப்பின் மாள்வது என்ற உணர்ச்சி பிறந்துவிட்டது.

காங்கிரசு ஆரிய நாகரிகத்தை வளர்ப்பதனாலும், தமிழ நாகரிகத்தைத் தளர்ப்பதனாலும், தமிழர்க்கு மாறானது. விடுதலை முயற்சி நல்லது. ஆனால், தனக்கு விடுதலை வராதது தமிழனுக்கு நல்லதன்று. “தாயும் பிள்ளையு மானாலும் வாயும் வயிறும் வேறு.

காங்கிரசாட்சியில், தமிழர்க்கு விளைந்த தீமைகளுள் முக்கியமானவை ஐந்து. அவை கட்டாய இந்தி, வகுப்புரிமையின்மை, பார்ப்பன ஆதிக்கம், பள்ளிகளை மூடுதல், பகுத்தறிவாளாமை என்பன.

இந்தியா ஒரு நாடன்று; பல நாடுகளையுடைய உட்கண்டம். ஐரோப்பா முழுவதும் நாசியராட்சியில் ஒன்றாய்த் தோன்றுவது போல, இந்தியாவும் ஆங்கிலராட்சியில் ஒன்றாய்த் தோன்றுகிறது. ஆங்கிலர் வருவதன் முன் இந்தியா பல நாடு; இன்றும் பல நாடு. ஒருபோதும் இந்தியா, ஒரு நாடா யிருந்ததில்லை. எதிர்காலத்தில் ஒரு நாடாகலாம். ஆனால், அதற்கு முன் ஒரு குலமாக வேண்டும். ஆரியம் இந்தியா முழுதும் பரவியிருப்பதால், இந்தியா ஒரு நாடென்று கொண்டால், ஆரியர்க்குமட்டும் மிகுந்த வசதியுண்டு, அதனால்தான் அவர் ஒரு நாடென்கின்றனர்.

இந்தியாவுக்கு இப்போது ஆங்கிலம் பொதுமொழியா யுள்ளது. அது உலகப் பொதுமொழி; சிறந்த கலை நூல்களைக் கொண்டது; அடிமைத் தன்மையை நீக்கி அறிவை விளக்குவது; சமுதாயத்தைச் சீர்திருத்துவது; மொழிச்சண்டைக்கு இடந்தராதது. ஆகையால் வேறொரு பொதுமொழி வேண்டுவதில்லை. வடமொழியும், வடஇந்திய மொழிகளும், ஆங்கிலமும் ஓரினமாதலின், ஆங்கிலத்தை அயன்மொழியென்ன முடியாது! ஆரிய ஆ மொழிகளைப் பேசுபவரே ஓர் ஆரிய மொழியை வெறுப்பின், திராவிடத்