உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 34.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




12

தமிழர் திருமணம் அவனையேற்றித் தெரு நெடுக இழுத்துச் செல்வர். அங்ஙனம் இழுக்கும்போது, அவன் உடம்பிற் கருக்கறுத்துக் காயம் பட்டவிடமெல்லாம் வெளுத்துத் தோன்றின், அவனுக்கு அவன் காதலியை மணமுடித்து வைப்பர்; அல்லாக்கால் வையார். இது காதலர் தாமாகக் கூடுவதன்றாயினும், ஒருபுடை யொப்புமைபற்றி இங்குக் கூறப்பட்டது.

காதற் பாட்டுகள்

66

இவ் வுலகிற் சிறந்தது இல்லற இன்பம். அதிலும், காதலர் நுகர்வது கரை யற்றது. அவர் ஓரூரராயும் ஒருவரையொருவர் முன்னறிந்தவராயும் இருக்க வேண்டுமென்னும் யாப்புறவில்லை. கருங்கடலுப்பிற்கும், கருமலை நாரத்தைக்கும் தொந்தம்” ஏற்படுவதுபோல், நெட்டிடைப்பட்ட இருவர் ஓரிடத்து ஒருவரையொருவர் கண்டு காதலிக்கவும் நேரும். அத்தகை நிலைமை வாய்ந்த ஒரு காதலன் கூற்றாக வுள்ள பாட்டொன்று வருமாறு :

"யாயும் ஞாயும் யாரா கியரோ

எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர் யானும் நீயும் எவ்வழி அறிதும்

செம்புலப் பெயனீர் போல

அன்புடை நெஞ்சம் தாங்கலந் தனவே.

(குறுந். 40)

(யாய் - என் தாய், ஞாய் - உன் தாய். எந்தை - என் தந்தை. நுந்தை - உன் தந்தை. கேளிர் - உறவினர். செம்புலப்பெயல்நீர் போல - சிவந்த நிலத்திற் சேர்ந்த நீரும் சிவப்பது போல.)

இனி, ஒரு காதலி கூற்றாக வுள்ள பாட்டொன்று வருமாறு :

"இராமழை பெய்த ஈரல் ஈரத்துள்

பனைநுகங் கொண்டு யானையேர் பூட்டி வெள்ளி விரைத்துப் பொன்னே விளையினும் வேண்டேன் பிறந்தகத் தீண்டிய வாழ்வே செங்கேழ் வரகு பசுங்கதிர் கொய்து

கன்று காத்துக் குன்றில் உணக்கி

ஊடுபதர் போக்கிமுன் உதவினோர்க்கு குதவிக்

காடுகழி இந்தனம் பாடுபார்த் தெடுத்துக்

குப்பைக் கீரை உப்பின்றி வெந்ததை

இரவல் தாலம் பரிவுடன் வாங்கிச்

சோறது கொண்டு பீறல் அடைத்தே

ஒன்றுவிட் டொருநாள் தின்று கிடப்பினும்

நன்றே தோழிநம் கணவன் வாழ்வே.

(நுகம்-நுகத்தடி. ஈண்டிய-செல்வமிகுந்த. உணக்கி-காயவைத்து. இந்தனம்-விறகு.

பாடு-விழுதல். தாலம்-உண்கலம். பரிவு-வருத்தம்.பீறல்-சேலைக்கிழிவு).