உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 34.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பண்டைத் தமிழ்மணம்

15

இனி, பொதுமகளிரல்லாது, கரணமின்றி மனைவியர்போல் வைத்துக் கொள்ளப்படும் வைப்பு என்னும் மகளிருமுண்டு. அவர் கன்னியராகவோ கட்டுப்பட்டவராகவோ கைம்பெண்டிராகவோ இருக்கலாம்.

பண்டைத்தமிழர் பொதுவாகப் பண்பாட்டிலும் பல்துறைப்பட்ட நாகரிகத்திலும் சிறந்திருந்தாரேனும், பெண்ணின்பத்துறையில் பெரும்பாலும் நெகிழ்ந்த நெறியுடையராகவே யிருந்தனர். அரசர் கட்டுமட்டின்றிச் சிற்றின்பத்தை நுகர்ந்து வந்ததினாலேயே, உலா, மடல், காதல் முதலிய அகப்பொருட் பனுவல்களும் (பிரபந்தங்கள்) பரத்தையிற் பிரிவு என்னும் கோவைக் கிளவிக்கொத்தும் இடைக்காலத் தெழுந்தன. மேனாட்டார் இந் நாவலந் தேயத்திற்கு வந்த பின்பே, இந் நெறிதிறம்பிய நிலை திருந்தத் தொடங்கிற்று.

பல்கணவம் பெண் பஞ்சத்தாலும் பெண்கொலையாலும் ஏற்படுவது. அது இன்று நீலமலைத் தொதுவரிடையே உள்ளது.

4. மணமகள் நிலை பற்றியது

மணமகள் நிலைபற்றி, தமிழ் மணங்கள். (1) கன்னி மணம், (2) கட்டுப்பட்டவள் மணம், (3) கைம்பெண் மணம் என முத்திறப்படும்.

கன்னி மணம், ஒரு கன்னிப் பெண்ணைப் புதிதாக மணத்தல்; கட்டுப் பட்டவள் மணம், ஒரு முறை மணக்கப்பட்டுத் தீரப்பட்டவளை மணத்தல்; கைம்பெண் மணம், கணவனை யிழந்தவளை மணத்தல். இவற்றுள் பின்னவை யிரண்டும் இழிந்தோர் மணமாகவும் இடைத்தரத்தோர் மணமாகவும்

இருந்துவந்திருக்கின்றன.

ஒரு முறை மணக்கப்பட்டவளை மறுமணஞ் செய்தல் சிறப்பில்லாத தாகக் கருதப்படுவதால், கட்டுப்பட்டவள் மணத்தில் மணமுழா (கலியாண மேளம்) இன்றியே தாலி கட்டப்படுவதுமுண்டு. அது கட்டுத்தாலியென்றும், மணமுழவு உள்ளது கொட்டுத்திருமணம் என்றும் பெயர் பெறும். கைம்பெண் மணம் பெரும்பாலும் கட்டுத்தாலியாகவே யிருக்கும்.

(2) இலக்கணப் பாகுபாடு

இனி, தமிழிலக்கண நூல்கள், மணமக்களின் காதல்நிலைபற்றித் தமிழ் மணங்களை, (1) கைக்கிளை, (2) அன்பினைந்திணை, (3) பெருந்திணை என மூவகையாக வகுத்துக் கூறும்.

கைக்கிளையாவது, ஆடவன் பெண்டு ஆகிய இருவருள்ளும் ம் ஒருவருக்கே காதல் இருப்பது; அன்பின் ஐந்திணையாவது, அவ் இருவருக்கும் காதல் இருப்பது; பெருந்திணையாவது, அவ் இருவருக்கும் காதல் இல்லா திருப்பது அல்லது ஒருவரையொருவர் வலிந்துகொள்வது. இம் மூன்றும், முறையே ஒருதலைக் காமம், இருதலைக் காமம், பொருந்தாக் காமம் என்றும் சொல்லப்பெறும். கை என்பது பக்கம். கிளை என்பது நேயம். ஆகவே கைக்கிளை என்பது ஒருதலைக் காதல். ஐந்திணை என்பன, குறிஞ்சி, முல்லை,

7