உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 34.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பண்டைத் தமிழ்மணம்

21

திருமண விருந்து அக்காலத்தில் வேளைக்கணக்கா யிராது, நாட்கணக்கா யிருக்கும். எளியர் ஒரு நாளும், செல்வர் ஏழுநாள் வரையும் விருந்தளிப்பர். மணமக்கள் பருவம் வந்தோராயின் அன்றே கூட்டப்பெறுவர். மணவிழா முடிந்தவுடன், மணமக்கட்குக் காப்புக் கழற்றப்படும்.

மணமானபின், 3ஆம், 5ஆம், 7ஆம், 9ஆம் நாள்களுள் ஒன்றில், மணமக்கள், மணமகன் வீட்டில் மணம் நடந்தால் மணமகள் வீட்டிற்கும், மணமகள் வீட்டில் மணம் நடந்தால் மணமகன் வீட்டிற்குமாக வீடு மாறுவர். இது மறுவீடு (அல்லது மருவீடு) போதல் எனப்படும். மறுவீடு மணமகள் வீடாயின், அங்கு மணமகனுக்குச் செய்யப்படும் விருந்து, மரு அல்லது மருவு எனப் பெயர் பெறும்.

மனையறம்

மணவினைகளெல்லாம் முடிந்தபின், கோவலன் கண்ணகி போலும் செல்வக்குடி மணமக்களை இல்லறத்திற்குரிய பொருள்களெல்லாம் இட்டு நிரப்பப்பெற்ற ஒரு தனிமனையில் இருத்துவது மரபு. அது 'மனையறம் படுத்தல்' எனப்படும்.

சின்னாட் சென்றபின், மணமகள் பெற்றோர் மணமகன் வீடு சென்று, தம் மகள் மனையறம் நடத்தும் திறத்தைப் பார்வையிடுவதுண்டு. அது 'வீடு பார்த்தல்' எனப்படும்.

இதுகாறும் கூறியன எல்லார்க்கும் பொதுவான பருவினைச் சடங்குகள். இனி, அவ்வக் குலமரபிற்கேற்பச் சிறப்பாக நடைபெறும் நுண்வினைச் சடங்குகள் எத்தனையோ பல. விரிவஞ்சி அவை விடுக்கப்பட்டுள.

பண்டைக்கால வதுவைமணம் பற்றிய இரு பாட்டுகள் வருமாறு: வாயில் மறுத்த தோழிக்குத் தலைமகன் சொல்லியது.

உழுந்துதலைப் பெய்த கொழுங்களி மிதவை பெருஞ்சோற் றமலை நிற்ப நிரைகால் தண்பெரும் பந்தர்த் தருமணல் ஞெமிரி மனைவிளக் குறுத்து மாலை தொடரிக் கனையிருள் அகன்ற கவின்பெறு காலைக் கோள்கால் நீங்கிய கொடுவெண் டிங்கள் கேடில் விழுப்புகழ் நாள்தலை வந்தென உச்சிக் குடத்தர் புத்தகல் மண்டையர் பொதுசெய் கம்பலை முதுசெம் பெண்டிர் முன்னவும் பின்னவும் முறைமுறை தரத்தரப் புதல்வற் பயந்த திதலையவ் வயிற்று வாலிழை மகளிர் நால்வர் கூடிக் கற்பினின் வழாஅ நற்பல உதவிப்

(5)

(10)

7

பெற்றோற் பெட்கும் பிணையை யாகென நீரொடு சொரிந்த ஈரிதழ் அலரி

(15)