உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 34.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




20

தமிழர் திருமணம்

மணவினைகள் தொடங்குமுன்பே, மணமகனுக்கும் மணமகளுக்கும், முறையே, வலக்கையிலும் இடக்கையிலும் காப்புநாண் கட்டப்பட்டிருக்கும். மணவிழா முடியும்வரை மணமக்கட்குப் பேயாலும் பிறவற்றாலும் எவ்வகைத் தீங்கும் நேரக்கூடாதென்பதே, அதன் நோக்கம். காப்பு தீங்கு வராமற் காத்தல். முதற்காலத்தில் குளிசம்போற் கட்டப்பட்ட காப்புநாணே, பிற்காலத்தில் அப் பெயருள்ள அணியாக மாறிற்று.

மணநாளில் மணமனையில் மங்கல மணமுழா முழங்கும். உற்றாரும் உறவினரும், மணப்பந்தற்கீழ் வந்தமர்வர். திருமண ஆசிரியன் முழுத்த வேளையில் மணவறையில் வந்தமர்வான். அவன் தமிழப் பார்ப்பானாகவோ, குலத்தலைவனாகவோ இருப்பான். மணமக்களும் நீராடி மஞ்சள் தோய்த்த அல்லது தோயாத புத்தாடை யணிந்து, மணமகன் முன்னும் மணமகள் பின்னுமாக, தனித்தனியாக மணவறைக்குக் கொண்டு வரப்படுவர். மணமனை மணமகன் வீடாயின் மணமகளும், மணமகள் வீடாயின் மணமகனும், வேறோர் மனையிலிருந்து மேள தாளத்துடன் அழைத்துவரப்பெறுவர்.

ii. கரணம்

திருமண ஆசிரியன் தெய்வ வழிபாடாற்றி, மணமக்கள் பெயரும் மணமும் விளம்பி, விளக்குச் சான்றாக அவர்களைச் சூளிடுவித்து, குங்குமம் மஞ்சளுடன் தட்டிலிட்டுச் சூடங் கொளுத்தப்பட்டுப் பெரியோரால் வாழ்த்தப் பெற்ற தாலியை எடுத்து, மணமகன் கையில் கொடுக்க, அவன் அதை வாங்கிப் பெண்ணின் கழுத்தில் கட்டுவன். அன்று முழவு இடியென முழங்கும். மணமக்கள்மேல் மலர்மாரி பொழியும். அதன்பின் மணமக்கள் மாலை மாற்றிக்கொள்வர். பெரியோர் அறுகும் அரிசியும் மணமக்கள்மேல் இட்டு "அத்திபோல் துளிர்த்து, ஆல்போற் படர்ந்து (தழைத்து), அரசுபோல் ஓங்கி, அறுகுபோல் வேரூன்றி, மூங்கில்போற் சுற்றம் முசியாமல் வாழ்ந்திருப்பீர்’ என்றும், 'பகவனருளால் பாங்காயிருந்து பதினாறும் பெற்றுப் பல்லாண்டு வாழ்க'என்றும், பிறவாறும் வாழ்த்துவர். இது 'அறுகிடல்' எனப்படும்.

iii. பின்னிகழ்ச்சிகள்

وو

திருமணத்திற்கு வந்தோர்க்கெல்லாம் தேங்காய் பழமும் பாக்கு வெற்றிலையும் சந்தனமும் பகிரப்பெறும். மங்கல மகளிரும் சிறுமியரும் அவற்றொடு மலரும் பெறுவர். அதன்பின் திருமண அவை கலையும். ஆயின், உற்றார் உறவினரெல்லாம் அங்கேயே யிருந்து மணவீட்டார்க்கு மொய்யும் மணமக்கட்கு நன்கொடையும் வழங்குவர். மொய்யெல்லாம் ஓலையில் எழுதப்பெறும். மணமக்கள் பெரியோர் காலில் விழுந்து வணங்குவர்.

அன்று மாலை அல்லது இரவு, ஊர்வலம் நிகழும். மணமக்கள் அவ்வக் குல மரபுப்படி, தேரிலோ, பல்லக்கிலோ, யானை குதிரை மீதோ வலம் வருவர். ஊர்வலம் முடிந்து வீடு சேர்ந்தவுடன், தேங்காயுடைத்தும், மஞ்சள் நீரால் மணமக்கள் பாதங்களைக் கழுவியும், ஆலத்தி யெடுத்தும், கண்ணெச்சில் (கண்திருஷ்டி) கழிக்கப்படும்.