உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 34.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




24

(இ

ள்.)

தமிழர் திருமணம்

1-9. நெஞ்சே குற்றமறப் பருப்புடன் கலந்து ஆக்கிய நெய்மிகுந்த வெண் சோற்றை, நீங்காத ஈகைத் தன்மையுடன் உயர்ந்த சுற்றத்தார் முதலியோரை உண்பித்து, புட்குறி இனிதாகக் கூட, தெள்ளிய ஒளியையுடைய அழகிய இடமகன்ற பெரிய வானம் களங்கமற விளங்க, திங்களைச் சகடம் கூடிய குற்றமற்ற நன்னாளில், மணமனையை அழகுபடுத்திக் கடவுளை வழிபட்டு, மண மேளத்துடன் பெரிய முரசம் முழங்க, தலைவிக்கு மணநீராட்டிய மகளிர், தம் கூரிய கண்களால் இமையாது நோக்கி விரைந்து மறைய,

10-18. மெல்லிய பூவையுடைய வாகையின் அழகற்ற பின் புறத்தையுடைய கவர்த்த இலையை, முதிய கன்று கறித்த பள்ளத்திற் படர்ந்த அறுகின், இடி முழங்கிய வானத்து முதன் மழைக்கு அரும்பிய கழுவிய நீலமணி போலும் கரிய இதழையுடைய பாவையொத்த கிழங்கிடத்துள்ள குளிர்ந்த மணமுள்ள அரும்புடன், சேர்த்துக்கட்டிய வெள்ளிய நூலைச்சூட்டி, தூய புத்தாடையாற் பொலியச் செய்து, விருப்பத்துடன் கூடி, மழையோசை போன்ற மணவோசை மிகுந்த பந்தலில் அணிகளை மிகுதியாய் அணிந்திருந்ததினால் உண்டான வியர்வையை விசிறியால் ஆற்றி, அவள் சுற்றத்தார் அவளை நமக்குத் தந்த முதல் நாள் இரவில்,

19-26. வெறுத்தலில்லாத கற்போடுகூடி என் உயிருக்கு உடம்பாக அடுத்தவள், கசங்காத புதுப்போர்வையைத் தன் உடல் முழுதும் போர்த்திக் கொண்டதால், மிகுந்த புழுக்கத்தையடைந்த உன் பிறை போன்ற நெற்றியில் அரும்பிய வியர்வையை, மிகுந்த காற்றுப் போக்குமாறு, சிறிது திற என்று அன்புமிக்க நெஞ்சத்தோடு போர்வையைக் கவரவே, உறையினின்று உருவிய வாளைப்போல் அவள் உருவம் வெளிப்பட்டு விளங்க, அதை மறைக்கும் வகை அறியாதவளாகி, விரைந்து நாணி விருப்பத்தோடு வணங்கினாள்.

அத்தகைய பேரன்புடையோள் இன்று யாம் பணிமொழி கூறிவேண்டாம் உணராது ஊடுகின்றனள்; ஆதலால் இவள் நமக்கு யாரளோ?

குறிப்பு : 'மைப்பறப் புழுக்கி' என்றும் பாடம். புழுக்கி - அவித்து. வானூர் மதியஞ் சகடணைய' என்று சிலப்பதிகாரத்தும் வந்திருப்பதால், திங்களைச் சகடணையும் நாள் திருமணத்திற்குச் சிறந்த நன்னாளாகக் கொள்ளப்பட்டதாகத் தெரிகின்றது.

முந்தின பாட்டிற்போன்றே இதிலும், திருமணநாளன்றே மணமக்கள் கூட்டப்பெற்றார் என்று குறித்திருப்பதைக் கவனிக்க.