உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 34.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




38

தமிழர் திருமணம்

பகலிரவும் அவற்றால் நாளும் வேளையும் ஏற்படுவதற்குக் காரணம், கதிரவன் தோற்றமறைவு அல்லது ஞாலத்தின் (பூமியின்) சுழற்சியே. இறைவன்,

66

அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம் அளப்பருந் தன்மை வளப்பெருங் காட்சி ஒன்றனுக் கொன்று நின்றெழில் பகரின் நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன இல்நுழை கதிரின் நுண்அணுப் புரையச் சிறிய வாகப் பெரியோன்'

(திருவாசகம், திருவண்டப்பகுதி, 1-6)

ஆதலின், நாளுங்கோளும் அவன் ஆணைக்கடங்கியே நடக்கும். 'அவனன்றி அணுவும் அசையாது', 'நாளுங்கோளுமே நல்லது செய்யும்' என்று நம்புவார், கடவுளை நம்பாதவரும், அவரது

"எட்டுத் திசையும் பதினாறு கோணமும் எங்குமொன்றாய் முட்டித் ததும்பி முளைத்தெழு சோதி"த்தன்மை

அறியாதவருமே யாவர்.

திருஞான சம்பந்தர் மங்கையர்க்கரசியாரின் வேண்டுகோட்கிணங்கிச் சமணரை யொழிக்க மதுரை சென்றபோது, 'இன்று நாளுங்கோளும் நன்றா யில்லாமையால் தாங்கள் மதுரை செல்ல வேண்டா' என்று திருநாவுக்கரசர் தடுக்க, அவர்,

66

வேயுறு தோளிபங்கன் விடமுண்டகண்டன் மிகநல்ல வீணைதடவி மாசறு திங்கள்கங்கை முடிமேலணிந்தென் உளமே புகுந்தவதனால் நாயிறு திங்கள்செவ்வாய் புதன்வியாழம் வெள்ளிசனி பாம்பிரண் டுமுடனே

ஆசறு நல்லநல்ல அவைநல்லநல்ல அடியார வர்க்குமிகவே”

“என்பொடு கொம்பொடாமை இவைமார் பிலங்க எருதேறி யேழை

யுடனே பொன்பொதி மத்தமாலை புனல்சூடி வந்தென் உளமே புகுந்த

வதனால்

ஒன்பதொ டொன்றொடேழு பதினெட்டோ டாறுமுடனாய

நாள்கள் அவைதான்

அன்பொடு நல்லநல்ல அவைநல்லநல்ல அடியா ரவர்க்கு

மிகவே'

என்று பாடிச்சென்று முழு வெற்றி கண்டார். இந்நிலைமை சம்பந்தர்போலும் பெரியார்க்குமட்டுமன்று, உண்மையன்புள்ள எல்லார்க்கும் உரித்தாம்.

"நாளன்று போகிப் புள்ளிடை தட்பப் பதனன்று புக்குத் திறனன்று மொழியினும்