உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 34.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




திருமணச் சீர்திருத்தம்

37

பெருவாரியாய்ப் பிறவாதபடி தடுத்துவிடுகின்றனர். அதோடு தமிழர்க்குள் ஒற்றுமையும் இல்லாது போகின்றது.

-

"ஒன்றுபட்டாலுண்டு வாழ்வு இங்கு

ஒற்றுமை யின்றேல் அனைவர்க்குப் தாழ்வு”

இதைத்தமிழ் மாகாண முன்னேற்றம் பற்றியாவது கவனித்தல் வேண்டும். நீண்டகாலமாகத் தொடர்ந்துவரும் குலமுறையைத் திடுமென்று நீக்குவது இயலாதேனும், உயர்த்தப்பட்டோர்க்கும் தாழ்த்தப்பட்டோர்க்கும் இதுபோது துப்புரவு பற்றி ஏற்றத்தாழ்வு உள்ளதேனும், வேளாளரும் முதலியாரும் போல்வாரும், மறவரும் இடையரும் போல்வாரும், இரட்டியாரும் நாயுடுவும் போல்வரும், தம்முள் மணந்துகொள்ளலாமே!

7

தமிழரின் பல்வேறு பெருங்குலங்களன்றி, (நாடும் ஊருமாகிய) இடம், உண்பொருள், உடை, சிறு தெய்வம், கொள்கை, சடங்கு, செய்பொருள், சிறப்பு நிகழ்ச்சி, குணம், நிறம், குடுமிநிலை, வழக்கம், அணி, தாலிவகை, மொழி, அலுவல், பட்டம், குலவரிசை, சின்னம், மக்கள் தொகை, தொகுப்பு, கலப்பு, தோற்றக்கதை, திறமை, முறைப்பெயர் முதலிய பற்பல வகைப்பற்றிப் பிரிந்து கிடக்கும் நூற்றுக்கணக்கான பொருந்தாக் குலப்பிரிவுகளிற் பலவும், அகமண வகுப்புக்களாகவே யிருந்துவருவது, தமிழன் முன்னேற்றத்திற்கு மாபெருந்தடை யாதலின், கல்விகற்ற தமிழ இளைஞர் குருட்டுத்தனமும் குறுகிய நோக்குமுள்ள குலமுதியர் சொற்கொள்ளாது, அதை விரைந்து தகர்ந்ததெறியக்கடவர். (4) பரிசம் வாங்காமை

பெண்ணிற்குப் பரிசம் கேட்பது ஓரளவு விலை கூறுவது போன்றிருத்த லால், செல்வப் பெற்றோர் அதனைக் கேளாதிருத்தல் சிறப்பாம். ஏழைப் பெற்றோராயின், மணச்செலவு நோக்கி ஒரு தொகை கேட்பது குற்றமாகாது.

இனி, பெண்ணிற்குக் கேட்பதற்குப் பதிலாக மணவாளப் பிள்ளைக்குக் கேட்பது, இயற்கைக்கு மாறானதாயும், எக்காரணத்தாலும் சரிமைப்படுத்த முடியாததாயும் இருக்கின்றது. இவ்வுலகத்தில் ஒருவன் பெறக்கூடிய பேரின்பப் பேறு பெண்ணே. அகத்தழகும் புறத்தழகும் ஒருங்கேயமைந்த அருமைப் பெண்ணிருக்கவும் அவளை விட்டுவிட்டு, காசிற்காசைப்பட்டு அழகிலியை மணப்பது, இல்லற இன்பத்தையும் வாழ்க்கை வசதியையும் பணத்திற்கு விற்பது போன்றதே.

(5) நாளும் வேளையும் பாராமை

'நாள் செய்வது நல்லார் செய்யார்', என்பது நம் முன்னோரின் கொள்கையேயானினும், அறிவியல் (விஞ்ஞானம்) வளர்ச்சியடைந்துள்ள இக்ாலத்திற்கு அது ஏற்காது.

இடம் என்பது எங்ஙனம் எங்கும் பரந்து தன்னளவில் வேறுபாடற்றதோ, அங்ஙனமே காலம் என்பதும் என்றும் பரந்து தன்னளவில் வேறுபாடற்றதாம்.