உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 34.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




36

xii. குடும்பநிலைப் பொருத்தம்

தமிழர் திருமணம்

ஊரில் ஒருவனே தோழன், ஆருமற்றதே தாரம்' என்பதாலும், மணமகள் செல்வ மிக்கவளாயின் மணமகனுக்கு நன்றேயாதலாலும், செல்வப் பொருத்தம் சிறப்பாய்க் கவனித்தற்குரிய தொன்றன்றாம். ஆயினும், இளவரசனும் கூலிக்காரியும்போல், அல்லது கூலிக்காரனும் இளவரசியும்போல், மணமக்கள் செல்வநிலை அளவிறந்து வேறுபடின், அவர் ஒருவருக்கொருவர் வாழ்க்கைத்துணையாய் இணைத்து வைக்கப்படற்குரியவராகார். குடும்ப நிலையைப் பிறப்பு என்று கூறினும் ஒக்கும்.

இங்ஙனம் பன்னிரு பொருத்தமும் பாராது செய்து வைக்கப்படும் அல்லது செய்யப்படும் மணங்கள்,

66

'ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை தான்சாந் துயரந் தரும்

என்னுங் குறட் கிலக்கான நட்புப்போல், துன்பந் தருவனவேயாம்.

"பிறப்பே குடிமை ஆண்மை யாண்டோ(டு)

உருவு நிறுத்த காம வாயில்

நிறையே அருளே உணர்வொடு திருஎன முறையுறக் கிளந்த ஒப்பினது வகையே'

(792)

என்பது, தொல்காப்பியம் (மெய்ப்பாட்டியல், 25) கூறும் பதின் பொருத்தமாகும். இதன் பொருள் :ஒத்த பிறப்பும், ஒத்த ஒழுக்கமும், ஒத்த ஆண்மையும், ஒத்த பருவமும், ஒத்த உருவநிலையும், ஒத்த அன்பும், ஒத்த நிறையும், ஒத்த அருளும், ஒத்த அறிவும், ஒத்த செல்வமும் எனத் தலைமகனும் தலைமகளும் (காதலனும் காதலியும்) ஒத்திருக்கும் பகுதிகள் பத்து வகைய என்றவாறு.

இவற்றுள், நிறையும் அருளும் ஒழுக்கத்துள் அடங்கும். "ஒத்த கிழவனும் கிழத்தியும் காண்ப

மிக்கோன் ஆயினும் கடிவரை யின்றே’

என்று தொல்காப்பியக் களவியல் (2) கூறுவதால், பெரும்பாலும் மணமக்கள் பலவகையிலும் ஒத்திருக்க வேண்டுமென்பதும், அவ் ஒப்புமையே நீடித்த இன்பவாழ்க்கைக்கு ஏதுவானதென்பதும், பெறப்படும்.

(3) குலவெறி கொள்ளாமை

தமிழரைப் பிரித்துக் கெடுத்தற்கென்றே, பிறப்பொடு தொடர்புற்ற குலப்பிரிவினை அயலாராற் புகுத்தப்பட்டதென்றும், அது நூலுத்தி பட்டறிவுகட்கு முற்றும் முரணானதென்றும் உலக முழுமையினும் இந்நாவலந் தேயத்திலேயே அது உள்ளதென்றும், திருவள்ளுவர் திருமூலர் முதலிய பெரியோரெல்லாரா லும் கண்டிக்கப்பட்டதென்றும், உணராத தமிழர், இன்னும் குலவுணர்ச்சி யிலேயே திளைத்து வருகின்றனர். இதனால், ஒவ்வொரு குலத்தாரும் தமக்குள்ளேயே மணந்து, தமிழினத்தில் பேரறிவுச் சுடர்கள்