உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 34.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




திருமணச் சீர்திருத்தம்

35

பார்ப்பது மணமக்கள் இசைந்து இனிதாய் இல்லறம் நடக்கற்பொருட்டேயாதலின், அவ் இசைவுபாட்டிற்குக் காரணமாக எல்லா நிலைமையும் பொருத்தமே.

ஒரு மனைக்கிழத்தியார் எத்துணையுயர்ந்த கல்விப் பட்டங்கள் பெற்றிருப்பினும், சமையல் தெரியாதிருப்பின், அவர் கல்வி நிறைவுற்றதாகக் கொள்ளப்படாது. கட்டழகெல்லாம் இளமைக் காலத்தில்தான் இன்புறுத்திக் குறை மறைக்கும். இடைமையிலும் முதுமையிலும் இன்புறுத்துவது அறுசுவை யுண்டியே. 'தாய்க்குப்பின் தாரம்' என்பது பழமொழி. ‘அறுசுவை யுண்டி அமர்ந்தில்லா ளூட்ட' என்பது நாலடியார் (1). வள்ளுவர் தபுதார நிலையிற் பாடிய கையறம்,

‘அடிசிற் கினியாளே அன்புடையாளே

என்று தொடங்குகின்றது.

99

மனைக்கிழத்தியார் அரச அல்லது பெருஞ் செல்வக் குடியைச் சேர்ந்தவராயிருந்து, சமையற்கு ஒரு மடைநூல் வல்லானை அமர்த்திக் கொண்டாலும், அன்றும் அவர்க்கு அக் கலை தெரிந்திருப்பது நன்றேயாம். மாலைக்காலத்திலும் களைப்புநேரத்திலும் மனைவியின் மிடற்றிசை அல்லது கருவி இசை கணவற்கு இன்பூட்டும்.

இனி, மணமக்கள் இருவரும் தாய்மொழியில் ஒத்திருப்பதும் கல்விப் பொருத்தத்தின் பாற்படும். மொழியே கல்வி வாயிலாதலின், இருவர் மொழியும் வேறுபட்டிருப்பின், ஒருவர் மொழியை ஒருவர் விரைந்து கற்றுக்கொள்ளல் வேண்டும்.

ix. முறைப் பொருத்தம்

மணமக்கள் உறவினராயின், மணமுறையினரா யிருத்தல் வேண்டும். முறையல் மணத்தினால் (Incest) நன்மகப்பேறு உண்டாவதில்லை. குடிக்கும் இழுக்காம்.

இனி, அக்கையார் மகளை மணத்தல் முறைமணமாயினும், நெருங்கிய வுறவாயிருத்தலால் அதுவும் விலக்கற்பாலதே. கணவன் மனைவியரின் அரத்த உறவு நெருங்க நெருங்க உடல் நொய்மையும் மதி மழுக்கமும், அகல அகல உடலுரமும் மதி விளக்கமும், அவர்தம் மக்கட்கு அமையும் என்பதை அறிதல்வேண்டும்.

x. வினைத்திறப் பொருத்தம்

மணமக்கள் இருவரும் சூழ்ச்சி வலிமையிலும் சுறுசுறுப்பிலும் ஒத்திருப்பது, வினைத்திறப் பொருத்தமாம். அவருள் ஒருவர் விரைமதியும் தாளாண்மையுடையவரா யிருக்க, இன்னொருவர் மந்த மதியும் சோம்பலு முடையவரா யிருப்பின் அவர்தம் இல்லற வாழ்க்கை ஒற்றுமையும் இன்பமும் உடையதாயிராது

xi. தொழிற் பொருத்தம்

மணமக்கள் இருவரும் ஒரே தொழிலை அல்லது தொடர்புள்ள தொழில் களைச் செய்தல், தொழிற் பொருத்தமாம். தொழில் வேறுபடினும் மாறுபடல் கூடாது.