உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 34.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




34

சிற்றெல்லை

மணமகன் அகவை

20

16

இடையெல்லை

தமிழர் திருமணம்

பேரெல்லை

22

25

18

20

மணமகள் அகவை

இந் நாடு வெப்ப நாடாதலால், குளிர்நாடுகளிற்போல் இளமையர் நீண்டநாள் மணவாதிருத்தல் இயலாது. ஆதலால், மக்கள் பேரெல்லையகவை அடைந்தவுடன், பெற்றோர் அவர்க்கு மணஞ்செய்து வைத்தல் நல்லது.

தக்க பருவத்தில் மணஞ்செய்து வையாமையால், இளைஞரும் இளைஞையரும் பல தீய பழக்கங்கட்கு ஆளாய்விடுகின்றனர். இதனால் ளைஞர் கொடிய நோய்களை அடைவதுடன், சேர்க்கை யாற்றலையும் இழந்துவிடுகின்றனர். ஆண்மையொன்றே ஆடவர்க்குச் சிறப்பு. அதனால் இன்புறுந் திறன்மட்டுமன்றி அகக்கரண வலிமையும் வாழ்நாளும் மிகுகின்றன. ஆதலால், ஆண்மையிழந்துவிடின் ஆடவனுக்கு வாழ்க்கையில்லை. அதன் பின், இருநிதிக்கிழவனாயினும் ஈடிலா அரம்பையைப் பெறினும் என்ன பயன்? மேலும், பிந்தி மணஞ்செய்வதால், பிள்ளைகளுந் தலையெடுக்காமல் பெற்றோரின் முதுமையிற் சின்னதுஞ்சிறியதுமா யிருந்து, குடும்பம் மிகமிக இடர்ப்படுகின்றது.

இவற்றையெல்லாம் நோக்கி, இனிமேலாயினும், பெற்றோர் தம் பிள்ளைகட்குத் தக்க பருவத்தில் மணஞ் செய்துவைப்பாராக.

vii. உருவப் பொருத்தம்

மணமக்கள் வளர்த்தியிலும் பருமனிலும் அழகுதரத்திலும் ஒத்திருப்பது உருவப் பொருத்தமாம். மணமகனிலும் மணமகள் குட்டையாயும் ஒல்லியாயும் இருக்கலாம். இதற்கு மாறாயிருத்தல் கூடாது.

அழகு இன்பத்தை மிகுத்துக் காட்டுவதால், அழகுணர்ச்சியுள்ள மணமக்கட்கு இயன்றவரை அழகுள்ள வாழ்க்கைத்துணையே அமர்த்தல் வேண்டும்.

மணமக்கள் உறுப்புக் குறையில்லாதிருத்தலும் உருவப் பொருத்தமாம். சில பெற்றோர், தம் மகனின் அல்லது மகளின் உறுப்புக் குறையை ஆடையணி களால் மறைத்து வைப்பதுண்டு. அதை நன்றாய்க் கவனித்தல் வேண்டும்.

viii. கல்விப் பொருத்தம்

மணமக்கள் இருவரும் கற்றோராயிருக்கலாம்; அல்லது மணமகன் மட்டும் கற்றிருக்கலாம். மணமகள் கற்றும் மணமகன் கல்லாதும் இருத்தல் கூடாது. மணமகள் மணமகனினும் மிகுதியாகக் கற்றிருத்தலும், செருக்கிற்கும் ஒத்துழையாமைக்கும் காரணமாயின் நன்றன்று.

மணமகள் இன்றியமையாது கற்றிருக்கக் வேண்டிய நூல்கள் (Sciences) உடல்நூலும், (Physiology) கருநூலும், (Embryology) பிள்ளைவளர்ப்பு நூலும் ஆகும்; கலைகள் (Arts) சமையலும் தையலும் இசையுமாகும். பொருத்தம்