உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 34.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




திருமணச் சீர்திருத்தம்

33

ஒரோவொரு பெண் ஒருபோதும் பூப்படைவதில்லை. அவர்க்கும் மணம் வேண்டுவதில்லை.

மக்கள்தொகை மிக்குள்ள இக்காலத்தில், மணங்களை எத்துணைக் குறைத்தல் முடியுமோ அத்துணைக் குறைத்தல் வேண்டும்.

(2) பன்னிரு பொருத்தம் பார்த்தல்

i. காதற் பொருத்தம்

மணமக்கட்கு முதன்மையாக முதன்மையாக வேண்டும் பொருத்தம் இதுவே. இஃதில்லாவிடின், ஏனைச் சிறப்பெல்லாமிருந்தும் ஏதும் பயனில்லை. ஆதலால், மணமக்கள் இசைவு பெற்றே அவர் பெற்றோர் அவர்க்கு மணஞ்செய்து வைத்தல் வேண்டும்.

ii. உடல்நலப் பொருத்தம்

மணமக்கள் இன்பந் துய்த்தற்கும் இல்லறம் நடத்தற்கும் இன்றியமை யாதது உடல்நலம். சில நோய்கள் மறைவாயிருக்கும் அல்லது மறைக்கப் பட்டிருக்கும். ஆதலால், தக்க மருத்துவப் பண்டி தரைக் கொண்டு மணமக்களை நோட்டஞ்செய்தல் வேண்டும். அல்லாக்கால், ஒருவரால் இன்னொருவர் நோய்ப்படுவதுடன், அவர்க்குப் பிறக்கும் பிள்ளைகளும் வழிவழி நோய்ப்பட்டு வருந்தவேண்டியிருக்கும்.

iii. ஒழுக்கப் பொருத்தம்

நல்லொழுக்கத்தில் துப்புரவும் (சுத்தமும்) அடங்கும். ஒழுக்கப் பொருத்தமில்லாக்கால், ஔவையார்க் கமுது படைக்கச் சொன்னவனும் குண்டலகேசியும்போல் துன்புற நேரும்.

iv. கருத்துப் பொருத்தம்

கட்சி மதம் முதலியவற்றிற் கருத்தொத்தலும், வேறுபடின் அவ் வேறு பாட்டிற்கு இடந்தரலும் கருத்துப்பொருத்தமாம். உயர்ந்த பண்பாட்டினராயின், கணவனும் மனைவியும் வெவ்வேறு மதத்தினராயு மிருக்கலாம்.

V. உண்டிப் பொருத்தம்

மரவுணவும் புலாலுணவும் ஆகிய இரண்டனுள்ளும் ஒன்றில் ஒத்திருத்த லும், ஒவ்வாது வேறுபடின் அவ் வேறுபாட்டிற்கு இடந்தரலும் உண்டிப் பொருத்தமாம்.

vi. அகவைப் பொருத்தம்

மணமக்கள் உடல் நல்வளர்ச்சியடைந்தபின் மணந்தால்தான், நன்மகப் பேறுண்டாவதுடன் தாய்க்குஞ் சேதமின்றாம். அதே சமையத்தில், இளமை கழியுமுன் மணந்தால்தான், இன்பச்சிறப்பும் பிற வசதிகளும் உண்டாகும். ஆதலால், பின்வருமாறு மணமக்கள் அகவை கவனிக்கப்பெறின் நலமாம்.