உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 34.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




32

(3) திரு.வி.கலியாணசுந்தரனார்

தமிழர் திருமணம்

இவரும் மறைமலையடிகள் போன்றாரே. ஆயின், அடிகள் கரண மொழியில் மருந்திற்கும் வடசொல் காண்பதரிது; இவர் மொழியிலோ ஒரோவோர் இடத்தில் வடசொற் கலக்கும். இதுவே இவர்தம்முள் வேற்றுமை.

ர்

எனினும், பிறர்மொழிபோல் மணிப்பவள மாலையும் பன்மணிக் கோவையுமா யிராது, வடசொல் அருகிவரப் பெறுவதே மணவழகனார் (கலியாணசுந்தரனார்) மொழியும் என்க.

(4) ஈ.வே. இராமசாமிப் பெரியார்

இவர், ஆரியக் கரணத்தையும் மணவறை யமைப்பையும் கடவுள் வழிபாட்டையும் மணச்சடங்குகளையும் விலக்கி, பொதுமக்கள் தமிழில் வாழ்க்கை ஒப்பந்தத்தை வகுத்துத் தந்தவர். இவர் செய்த மாறுதல்களுள், கடவுள்வழிபாட்டு விலக்கு நம்பா மதத்தாராலேயே யன்றி நம்புமதத்தாரால் சீர்திருத்தமாகக் கொள்ளப்பெறாது.

இங்ஙனம், மார்க்கசகாயர் பிராமணியத்தையும், மறைமலையடிகளும் கலியாணசுந்தரனாரும் அஃதுடன் ஆரிய மொழியையும், ஈ.வே.ரா. அவற்றோடு வீண் சடங்குகளையும், விலக்கித் திருமணக் கரணத்தைத் திருத்தியவராவார். 2. பெற்றோர் கவனிக்க வேண்டியவை

மணமக்கள் பெரும்பாலும் உலகியலறியா இளமையராதலானும், மணவாழ்க்கை ஆயிரங்காலத்துப் பயிராதலானும் இளமை எளிதாய் உணர்ச்சி வயப்பட்டுக் கெட்டுவிடுதலானும், திருமணப் பொறுப்பை முற்றும் மணமக்களிடத்தில் விட்டுவிடாது, பெற்றோர் முற்படவே விழிப்பாகவும் எச்சரிக்கையாகவுமிருந்து பின்வரும் பன்னிரு கடமைகளை ஆற்றல்வேண்டும். (1) பால்நிலை கவனித்தல்

சில பெற்றோர், ஆணுடம்பு கொண்டாரெல்லாம் ஆண்மையரென்றும், பெண்ணுடம்பு கொண்டாரெல்லாம் பெண்மையரென்றும் கருதி, அவர் பாலியல்பு அற்றிருப்பதையும் திரிந்திருப்பதையும் கவனிப்பதே யில்லை.

ஆண்மை திரிந்து பெண்மை கொண்டவன் பேடி; பெண்மை திரிந்து ஆண்மை கொண்டவள் பேடன்; இவ் விருவர்க்கும் பொதுப் பெயர் பேடு; ஆ இருபாலும் அல்லாதது அலி. இம் மூவர்க்கும் மணமே வேண்டிய தில்லை.

இனி, இருபாலுள்ளும், பாலுணர்ச்சியோ சேர்க்கை விருப்பமோ ஒரு சிறிதும் இல்லாதவருமுண்டு. அவர்க்கும் மணம் வேண்டுவதில்லை.

ஆண்மை திரியாதவருள்ளும் பல தீய பழக்கங்களால் சேர்க்கையாற்றல் இழந்தவர் சிலர். அவர்க்கு மணஞ்செய்துவைப்பின், அவர் மனைவியர் ஒழுக்கங்கெட வேண்டும்; அல்லது கணவர்க்குக் கட்டுப்பட்டுக் காலமெல்லாம் எரிந்து வேகவேண்டும்.