உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 34.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




44

தமிழர் திருமணம்

உறவினர் அயலூரிலிருந்து ஒரு மணவீட்டிற்கு வந்திருப்பின், கரணம் முடிந்தபின், எத்துணை விரைந்து திரும்ப முடியுமோ அத்துணை விரைந்து திரும்பிவிடவேண்டும்; 'என்று செல்வாரோ!' என்று மணவீட்டார் ஏங்கிக் கலங்குமாறு, பன்னாள் தங்கிவிடுதல் கூடாது.

7

சீர் செய்தல், வரிசை வைத்தல், மொய்யெழுதுதல், பரிசளித்தல், நன்கொடை வழங்கல், முதலியவை கைம்மாறு கருதிச் செய்யப்படும்போது, அவற்றின் ஏற்றத்தாழ்வு இழிதகவாய்ச் சொல்லிக் காட்டப்படுதலாலும், அதனால் கண்ணன்ன கேளிர்க்கும் மனக்கசப்புண்டாவதாலும், கைம்மாறு கருதா வகையில் அவற்றை அன்பளிப்பாக வைத்துக்கொள்வதே சாலச் சிறந்ததாம். 5. அரசியலார் கவனிக்க வேண்டியவை

ஓர் உடம்பு நலமாயிருத்தல் வேண்டின், அதன் உறுப்புகளெல்லாம் நலமாயும் ஒன்றுபட்டுமிருத்தல் வேண்டுவதுபோல; ஒரு நாடு முன்னேற வேண்டுமாயின், அதன் மக்கள் வகுப்பாரெல்லாம் முன்னேறியும் ஒன்றுபட்டு மிருத்தல் வேண்டும். தமிழ்நாட்டில் இத்தகைய முன்னேற்றத்திற்குக் குலப் பிரிவினை பெருந் தடையாயிருத்தலின், அரசியலார் அதை அறவே ஒழித்தற் கான செயல்களை உடனடியாய் மேற்கொள்ளவேண்டும். அவை,

(1) கலப்புமணஞ் செய்வார்க்கு, மணச்செலவு முழுவதையுமேனும் அதில் ஒரு பகுதியையேனும் ஏற்றுக்கொள்ளுதலும்,

(2) அவர்க்கு மண முடிந்தவுடன் அவர் தகுதிக்கேற்ப அரசியல் அலுவலளித்தலும்,

(3) அவர் பெறும் மக்கட்குப் படிப்புதவி செய்தலும் ஆகும்.

கலப்புமணமும், மணமகளை நோக்கி, (1) உயர் கலப்புமணம், (2) ஒத்த கலப்புமணம், (3) தாழ் கலப்புமணம் என முத்திறப்படும். ஒரு மறவன், ஒரு வேளாளப் பெண்ணை மணப்பது உயர் கலப்புமணம்; ஓர் இடைப்பெண்ணை மணப்பது ஒத்த கலப்புமணம்; ஒரு தாழ்த்தப்பட்ட குலப்பெண்ணை மணப்பது தாழ் கலப்புமணம். இம் மூன்றும் கலப்புவகையில் முறையே கடையிடை தலையாம். ஆதலால், அவற்றின் தரத்திற்கேற்பப் பாராட்டுதவியு மிருத்தல் வேண்டும்.

ஒட்டுமரங்கள் உயர்ந்த கனிகளைத் தரல்போல் கலப்பு மணமக்கள் அறிவாற்றலிற் சிறந்த மக்களைப் பெறுவாராதலால், நாட்டு முன்னேற்றத்திற்கேற்ற நன்மக்கட்பேற்றை விளைப்பது, அரசியலார் மேற்கொள்ள வேண்டிய கடமையாகும்.

6. புதியன புகுதல்

மணமக்களை முன்னமே பழகச் செய்தல், அச்சிட்ட அழைப்பிதழ் விடுத்தன்று, பொதுக் கட்டடத்தில் மணம் நடத்தல், மணமக்கள் எளிய உடையுடுத்தல், கரணநடப்பைக் கரண ஆசிரியர் (புரோகிதன்) பொறுப்பில் குத்தகையாக விட்டுவிடல், மணவறையின்மை, சொற்பொழிவாற்றுவித்தல்,