உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 34.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பின்னிணைப்பு

1. திருமண அழைப்பிதழ்

போலிகை (மாதிரி) 1

அன்புடையீர்,

66

திருச்சிற்றம்பலம்

திருமண அழைப்பு

குவளைக் கண்ணி கூறன் காண்க அவளுந் தானும் உடனே காண்க

எல்லாம் வல்ல இறைவன் திருவருளால், நிகழும் 1131ஆம் ஆண்டு வைகாசி மாதம் 29ஆம் நாள் (11.6.1956) திங்கட்கிழமை புனர்பூசநாள் காலை 9 மணிக்குமேல் 10 மணிக்குள், கடக நற்பொழுதில்,

திருவாளர் ஆ. இராசகோபால்

பிள்ளை அவர்கள் திருமகன்

திருவளர் செல்வன்

அறிவியல் இளைஞன் (B.Sc.)

கலியாணசுந்தரம்

என்னும் மணவழகனுக்கும்

திருவாளர் சுப்பையாப் பிள்ளை அவர்கள் திருமகள்

திருவளர் செல்வி வடிவழகியம்மைக்கும்

சன்னைப் பவழக்காரத்தெரு, 6ஆம் எண் திருவரங்க நிலையத்தில் நடைபெறும் திருமணத்திற்கும், அதைச் சார்ந்த நிகழ்ச்சிகளுக்கும், தாங்கள் உற்றார் உறவினருடன் வந்திருந்து மணமக்களை வாழ்த்தும்படி வேண்டிக் கொள்கிறோம்.

அன்புள்ள,

ஆ. இராசகோபால் பிள்ளை,

ராலீசு இந்தியா மட்டிட்டது (Ltd.) சென்னை.

வ.சுப்பையாப் பிள்ளை,

திருநெல்வேலித் தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழக ஆட்சியாளர்.