உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 34.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




48

போலிகை 2

தமிழர் திருமணம்

ஐயன்மீர், அம்மைமீர்,

திருமண அழைப்பிதழ்

இறைவன் திருவருளை முன்னிட்டு, நிகழும் வள்ளுவராண்டு 1987 தை மாதம் 21ஆம் நாள் (3-2-1956) வெள்ளிக்கிழமை காலை 7.30 மணிக்குமேல் 8.45 மணிக்குள், மகர ஓரையில்,

என் இளைய மகன்

நீடுவாழி சீராளனுக்கும்

கண்ணமங்கலம் பண்ணையார்

திருமான் கழறிற்றறிவார் அவர்களின் மகள் நிறைசெல்வி கயற்கண்ணிக்கும்

பெரியோரால் உறுதி செய்யப்பட்டபடி, இவ்வூர்ப் பொய்யாமொழியார் தெருவில், 23 என்னும் எண்ணுள்ள என் இல்லத்தில், மதுரைத் தியாகராயர் கல்லூரித் தலைமைத் தமிழ்ப் பேராசிரியர், பண்டாரகர் (Dr.) மா. அரசமாணிக்கனார் (எம்.ஏ.,எல்.தி.,எம்.ஓ.எல்.,பிஎச்.டி.) அவர்களைக் கரண ஆசிரியராகக் கொண்டு திருமணம் நிகழவிருப்பதால், தாங்கள் சுற்றஞ்சூழ முற்பட வந்திருந்து திருமணத்தைச் சிறப்பிப்பதுடன் மணமக்களையும் வாழ்த்தியருளுமாறு வேண்டிக்கொள்கின்றேன்.

முதுகுன்றம் (விருத்தாசலம்),

19-1-1956

போலிகை 3

"

இங்ஙனம் மகரநெடுங்குழைக்காதன்

ஐயன்மீர், ஐயைமீர்,

திருமண அழைப்பிதழ்

நிகழும் வள்ளுவராண்டு 1987 பங்குனி மாதம் 8ஆம் நாள் (21-3-1956) அறிவன் (புதன்) கிழமை காலை 8 மணிக்கு,

என் தங்கை செல்வி

குயின்மொழியாளுக்கும்

சென்னைப் பச்சையப்பன் கல்லூரிக் கணித விரிவுரையாளர் செல்வர் கண்டறிவாருக்கும்

இவ்வூர் ஆளவந்தார் தெருவில் 19 என்னும் எண்ணுள்ள வீட்டில், திருச்சிராப்பள்ளித் ‘தமிழர்நாடு' ஆசிரியர், திருவாளர் கி.ஆ.பெ. உலகநாயகம் (விசுவநாதம்) அவர்கள் நடத்திவைக்கும் திருமணத்திற்கு, தாங்கள் உற்றார் உறவினருடன் வந்திருந்து, அப் புது வாழ்க்கையரை வாழ்த்தியருளுமாறு பன்முறை வேண்டுகின்றேன்.

திருவரங்கம்,

11-3-56

அன்பன், சீர்திருத்தநம்பி

"