உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 34.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பின்னிணைப்பு போலிகை 4

49

பேரன்பீர்,

வாழ்க்கை ஒப்பந்த அழைப்பிதழ்

நிகழும் வள்ளுவராண்டு 1987 வைகாசிமாதம் 18ஆம் நாள் (31-3-56) வியாழக்கிழமை காலை 8-15 மணிக்குமேல் 9 மணிக்குள்,

வினைதீர்த்தான் கோயில் (வைத்தீசுவரன் கோயில்)

'தமிழன்' ஆசிரியர் தோழர் இளஞ்செழியனுக்கும்,

மயிலாடுதுறைத் (மாயவரம்) தோழியர்

தாமரைக்கண்ணிக்கும்

மயிலாடுதுறைத் 'தமிழர் முன்னேற்றக் கழக' அலுவலகத்தில், அறிஞர் அண்ணாதுரை தலைமையில் சீர்திருத்தத் திருமணம் நடைபெறும். அவ்வமயம், சென்னைப் பச்சையப்பன் கல்லூரித் தமிழ் விரிவுரையாளர் தோழர் அன்பழகனார் (எம்.ஏ.) 'தமிழர் திருமணம்' என்னும் பொருள்பற்றிப் பேசுவார். தாங்கள் தமருடன் வந்திருந்து மணமக்களை வாழ்த்தியருள வேண்டு

கின்றேன்.

தோழன், நெடுஞ்செழியன்.

போலிகை 5

அன்பரீர்,

வாழ்க்கை ஒப்பந்த அழைப்பிதழ்

நிகழும் வள்ளுவர் ஆண்டு 1987 வைகாசித்திங்கள் 30ஆம் நாள் (12-6-'56) செவ்வாய்க்கிழமை காலை 8 மணிக்கு, நானும் மறைக்காட்டுப் (வேதாரணியம்) 'பெரியார்' துவக்கப்பள்ளி ஆசிரியை பூம்பாவையும், சேலம் அறிவுடைநம்பி தெருவில் 'பகுத்தறிவு நிலையத்தில்', ஈ.வெ.ரா. பெரியார் தலைமையில் செய்துகொள்ளும் வாழ்க்கை ஒப்பந்தத்திற்கு, தாங்கள் தமருடன் வந்திருந்து எங்களை வாழ்த்தியருளுமாறு தாழ்மையாய் வேண்டிக்கொள்கின் றோம்.

திருமணத்தின்போது, சேலங் கல்லூரி, வரலாற்றுத்துறைத் தலைவர் திரு. சொக்கப்பா அவர்கள் (எம்.ஏ., எல்.தி.), ‘திருமணச் சீர்திருத்தம்' என்னும் பொருள்பற்றிப் பேசுவார்கள்.

சேலம்,

12.2.'56

மதியழகன்

பூம்பாவை