உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 34.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




50

போலிகை 6

திருமண அழைப்பிதழ்

மணமகன்:

(R) துரையாண்டான் (துரைசாமி) சேலம் ஈரோடு மின்சாரப்

பாதீட்டுக் குழும்பு, மட்டிட்டது. அன்புடையீர்,

தமிழர் திருமணம்

மணமகள்:

(A) கலைமகள் (சரசுவதி) திரு வீரப்பப்பிள்ளை மகள்

ம்

நிகழும் வள்ளுவராண்டு 1987 கைகாசித்திங்கள் 29ஆம் நாள் (11-6-1956) திங்கட்கிழமை காலை 9 மணிக்குமேல் 10 மணிக்குள், சேலம் கிச்சிப்பாளையம் அரங்கநாதம் பிள்ளை தெரு, 41ஆம் எண் இல்லத்தில் நடக்கும் எங்கள் திருமணத்திற்கு, தாங்கள் தங்கள் சுற்றத்தாருடன் வருகை தந்து மன்றலைச் சிறப்பிக்கப் பணிவுடன் வேண்டுகின்றோம்.

சேலம், 7-6-1956

தங்கள் அன்புள்ள,

துரையாண்டான் கலைமகள்

போலிகை 7

தமிழ் வாழ்க!

தமிழ்க்கொடி வெல்க!

மன்றல் அழைப்பு மடல்

அன்பர்காள்,

நிகழும் வள்ளுவராண்டு 1987 நேர்வான் (சித்திரை) மாதம் 20ஆம் நாள் (2-5-'56) அறிவன் (புதன்) கிழமை காலை 8 மணிக்கு,

வேலூர் மிதிவண்டிச்

செப்பனீட்டாளர் திருவாளர்

வடிவேலனார்க்கும்

குடியேற்றம் (குடியாத்தம்)

மருத்துவச்சியார் திருவாட்டியார்

வள்ளியம்மையார்க்கும்

வேலூர் மணமண்டபத்தில் ‘கீழை உயிரீட்டு வைப்புறுதி' (Oriental Life Insurance) முகவர் (Agent) திருவாளர் அண்ணல்தங்கோ நடத்திவைக்கும் தமிழ்த்திருமணத்திற்கு, தாங்கள் தவறாது குடும்பத்துடன் வந்திருந்து, மணமக்களை வாழ்த்திருயருளப் பெரிதும் வேண்டுகின்றேன்.

வேலூர், 25-4-'56

தமிழ்த் தொண்டன், நக்கீரன்