உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 34.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பின்னிணைப்பு

2. திருமண நிகழ்ச்சி நிரல்

(1) கடவுள் வணக்கம் (2) கரணம்

(3) சொற்பொழிவு

(4) வாழ்த்திதழ் படித்தல்

(5) பாகடைப் பகிர்வு (தாம்பூலம் கொடுத்தல்)

(6) பரிசளிப்பு

(7) நன்றி கூறல்

(பாகு = பாக்கு. அடை = இலை, வெற்றிலை. பாகு+அடை = பாகடை)

3. திருமணத் தமிழ்க் கரணம்

51

தமிழ்ப்புலவர், ஆசிரியர், தமிழப்பார்ப்பார், குலத்தலைவர், அறிஞர், முதியோர் முதலியவருள் ஒருவரான கரண ஆசிரியர் அல்லது திருமண ஆசிரியர், திருமணப் பந்தலில் அல்லது கொட்டகையில் உள்ள மணவறை யிலாயினும் மணமேடையிலாயினும், திருமண மண்டபத்தில் அல்லது கட்டடத்தில் ஒரு கோடியிலாயினும், மணமக்களை ஓர் அறுகாலியில் (bench) அல்லது இணையிருக்கை மெத்தை நாற்காலியில் நெருங்கியிருக்கச் செய்து, திருமண அவையோரை நோக்கி நின்று,

என விளித்து,

இன்று.

பெருமானரே! பெருமாட்டியரே!

(அல்லது)

பெரியோரே! தாய்மாரே!

(அல்லது)

உடன்பிறப்பாளரே! உடன்பிறப்பாட்டியரே!

என்னும் மணமகனுக்கும்,..

என்னும் மணமகளுக்கும், இறைவன் திருமுன்பும் இங்குள்ள பெரியோர் முன்னிலையிலும், (இங்குள்ள பெரியோர் முன்னிலையில்) திருமணக் கரணம் நிகழவிருக்கின்றது. அனைவரும் அமைதியாயிருக்கக் கேட்டுக்கொள் கின்றேன்; என்று அவையமர்த்தி,

'அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

பகவன் முதற்றே யுலகு

என்னும் முதற் குறளையேனும்,

99

"உலகம் யாவையும் தாமுள வாக்கலும் நிலைபெ றுத்தலும் நீக்கலும் நீங்கலா அலகி லாவிளை யாட்டுடை யார்அவர் தலைவர் அன்னவர்க் கேசரண் நாங்கள்

99

என்னும் கம்பவிராமாயணக் கடவுள் வணக்கச் செய்யுளையேனும்,