உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 34.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




52

தமிழர் திருமணம்

"உலகெ லாமுணர்ந் தோதற் கரியவன் நிலவு லாவிய நீர்மலி வேணியன்

அலகில் சோதியன் அம்பலத் தாடுவான் மலர்சி லம்படி வாழ்த்தி வணங்குவாம்" என்னும் பெரியபுராணக் கடவுள் வணக்கச் செய்யுளையேனும், துங்க இல்லறத் துணைமையை நாடியே இங்க மர்ந்துள இம்மண மக்களை

மங்க லம்மிகு மணவினைப் படுத்தவே எங்குந் தங்கிய இறையடி பணிகுவாம்

என்னும் திருமண இறைவணக்கச் செய்யுளையேனும், பத்தியுணர்ச்சியுடன் ஓதி, பின்வருமாறு கரணம் நடத்திவைத்தல் வேண்டும்.

கடவுள் நம்பிக்கையில்லாவிடத்தில் கடவுள் வணக்கத்தை விட்டு

விடலாம்.

கரண ஆசிரியர் (மணமகனை நோக்கி)

என்னும் இவளை (இவரை) உன் (உம்) வாழ்க்கைத்துணையாகக்

கொள்ள இசைகின்றாயா? (இசைகின்றீரா?)

மணமகன் - இசைகின்றேன்.

௧.ஆ. (மணமகளை நோக்கி)

நீ

(நீர்)....

என்னும்

நீ (நீர்)

வனை

னை

7

இவரை) உன் (உம்) வாழ்க்கைத் துணையாகக்கொள்ள இசைகின்றாயா? (இசைகின்றீரா?)

மணமகள் - இசைகின்றேன்.

க.ஆ. (மணமகன் குரவரை நோக்கி)....... உங்கள் மகன் (மகனார்)....... என்பவன் என்னும் இந் நங்கையை (நங்கையாரை)

(என்பவர்)

வாழ்க்கைத் துணையாகக் கொள்வது, உங்கட்கு இசைவுதானா?

மணமகன் குரவர் - இசைவுதான்.

௧.ஆ. (மணமகள் குரவரை நோக்கி) உங்கள் மகள் (மகளார்)........ என்பவள் (என்பவர்) ....... என்னும் இந் நம்பியை (நம்பியாரை) வாழ்க்கைத் துணையாகக் கொள்வது, உங்கட்கு இசைவுதானா?

மணமகள் குரவர் - இசைவுதான்.

க.ஆ. (மணமகன் தன் வலக்கையால் மணமகள் வலக்கையைப் பிடிக்கச் செய்து, பின்வரும் உறுதிமொழியைத் தாம் தொடர் தொடராகச் சொல்லி, மணமகனைச் சொல்வித்து, அது முடிந்தபின், மணமகளையும் அவ்வாறே சொல்வித்தல் வேண்டும்).

மணமகன்

ஆகிய நான்,

ஆகிய உன்னை, இன்று என் வாழ்க்கைத் துணையாக ஏற்றுக்கொண்டு, என் உயிர் உடல் பொருள் மூன்றையும் உனக்கே ஒப்புவித்து, என் வாழ்நாள் முழுதும், உன்