உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 34.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பின்னிணைப்பு

57

பண்டைக் காலத்தில் கழுத்தி லணியப்படும் அணிகளெல்லாம் தாலியெனப்பட்டமை, அச்சுத்தாலி முளைத்தாலி புலிப்பற்றாலி ஐம்படைத்தாலி முதலிய பெயர்களால் அறியப்படும். அச்சுத்தாலி என்பது காசுமாலை. முளைத்தாலி யென்பது சிறுமியர் கழுத்திலணியப் பெறும் சிறுமணிமாலை புலிப்பற்றாலி யென்பது குறிஞ்சிநிலச் சிறார் கழுத்திலும் பெண்டிர் கழுத்திலும் அணியப்பெறும் புலிப்பல் மாலை. ஐம்படைத்தாலி என்பது திருமாலின் ஐம்படையாகிய சங்கு சக்கர வில்வாள் தண்டவடிவிற் செய்யப்பட்டு, சிறுவர் கழுத்தில் பாதுகாப்பாக அணியப்பெறுவது. ஐம்படைத்தாலி, 77ஆம் புறப்பாட்டில் தாலியென்றே சொல்லப்பட்டது.

உண்டு.

6

இனி, குதிரையின் கழுத்தில் அணியப்பெற்ற தாலியென்னும் அணியும்

"வலியுடை யுரத்தின் வான்பொற் றாலி"

(18:13)

என்று பெருங்கதை கூறுதல் காண்க. சில வெள்ளாட்டின் கழுத்தில் தொங்கும் சதையும், ஒப்புமைபற்றித் தாலியெனப்படும்.

"கயிற்கடை யொழுகிய காமர் தூமணி செயத்தகு கோவை

99

(6:01 - 2)

என்னும் சிலப்பதிகாரத் தொடரில், கோவை என்பதற்குப் 'பின்றாலி' யென்று அரும்பதவுரைகாரரும் அடியார்க்கு நல்லாரும் உரைத்திருப்பதால், அக்காலத்து முன்றாலி பின்றாலியென இருவகை யணி யிருந்தமையும் பெறப்படும். முன்றாலி மார்பில் தொங்குவது; பின்றாலி முதுகில் தொங்குவது. இவற்றால், தாலி என ஒரு தனியணி முற்காலத்திருந்தமையும், பின்பு எழுந்த அதன் வேறுபாடுகள் அவற்றிற்கேற்ப வெவ்வேறு அடையடுத்துக் கூறப்பட்டமையும், பெறப்படும்.

தாலி என ஒரு குறிப்பிட்ட மங்கல அணி பிற்காலத்துத் தோன்றியபின், அது ஒவ்வொரு குலத்திற்கும் ஒன்றாக வெவ்வேறு வடிவிலும் அளவிலும் செய்யப்பட்டு அததற்கேற்பப் பெயரும் பெற்றது. ஆமைத்தாலி, பொட்டுத்தாலி, சிறுதாலி, பெருந்தாலி என்பன சில பெயர்கள்.

தாலிபோன்றே தாலிக்கொடியும் மங்கலமாகக் கருதப்பட்டு, மங்கலநாண் எனப்பெற்றது. அது முதற்கண் மஞ்சள் தோய்த்த நூற்கயிறா யிருந்ததினால், சில குலத்தார் இன்னும் அதன் பழநிலையை மரபாகப் போற்றிக் காப்பர். சில குலத்தார் அதைப் பொற்கொடியாகச் செய்துகொள்வர். இனி, மங்கலநாணையே தாலியாகக் கொண்டாரும் உண்டு.

தாலியையும், தனியாக அணிவதும் வேறு சில உருக்களுடன் சேர்த்து அணிவதுமாக, இருவேறு மரபுகள் எழுந்துள்ளன. தாலியையே அணியாக முதுபண்டை நிலையில், இன்றும் பல அநாகரிகத் திரவிட மரபினர் உளர். கொங்கு நாட்டு வேளாளப் பெண்டிர் கனத்த தாலியை அணிவதால், சிறப்பு நாள்களில் அதை அணிவதும் பிற நாள்களிற் கழற்றி வைத்திருப்பதும் அவர் வழக்கம்.