உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 34.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




58

தமிழர் திருமணம் தாலிகட்டுவது ஆரியர் வழக்கமன்றென்பது, பின்வரும் (P.T.) சீநிவாச ஐயங்கார் கூற்றால் அறியப்படும்.

"திருமணச் சடங்குகளில், தலைமையானதாகத் தாலியணிவதும், மஞ்சள் தோய்த்த நாணைக் கழுத்திற் கட்டுவதும் போன்ற சில அனாரிய வழக்கங்கள், தெற்கத்துப் பிராமணப்பெண்டிர்க்கு அருமையாக உள்ளன” ‘தமிழர் வரலாறு’ (History of the Tamils) ப. 57.

66

"இது (தாலியணிவது) கிருகிய சூத்திரங்களிலேயே சொல்லப்படாத ஒரு தூய தமிழ வழக்கம். கையைப் பிடிக்கும் பாணிக் கிரகணத்தையும் ஏழடியிடும் சப்த பதீயையுமே, திருமணச் சடங்கின் உயிர்நாடிப் பகுதிகளாகக் கிருகிய சூத்திரங்கள் கொள்கின்றன" மேற்படி, அடிக்குறிப்பு.

பாணிக்கிரகணம் என்பது எங்ஙனம் ஆரியர்க்கு முதன்மையானதோ, அங்ஙனமே தாலிகட்டு என்பதும் தமிழர்க்கு முதன்மையான தென்க.

"மணமகன் தாலியை எடுத்து, 'பெண்ணே! அறப்பயன் பெறுவதற்குத் தாலி கட்டுகின்றேன்' என்று சொல்லி, மணமகள் கழுத்தில் ஒரு கயிற்றாற் கட்டுகின்றான். இக் கூற்று வேதமந்திரமன்று. மணச்சடங்கின் இப் பகுதியும் கிருகிய சூத்திரங்களிற் சொல்லப்படவில்லை.” “தென்னாட்டுக் குலமரபு' (Castes and Tribes of Southern India), ப. 285.

கழுத்திலணியும் தாலியினும் கையிலணியும் மோதிரமே கண்ணியமும் நாகரிகமும் வாய்ந்ததெனின், கொத்துக்கொத்தாய்ப் பொற்றொடரியும், மொத்த மொத்தமாய்ப் பன்மணிமாலையும் கழுத்திலணியும்போது, தாலிக்கேன் இடமில்லையென எதிர் வினவி விடுக்க.

குறிப்பு : தமிழரெல்லாரும் ஓரினமாயினும், பழக்க வழக்கங்களில் வேறுபட்ட பல்வேறு தமிழக் குலங்கள் தொன்றுதொட்டு இருந்துவருவதாலும், கடைக்கழகக் காலத்திலேயே சில தமிழக் குலங்கள் சில ஆரிய வழக்கங்களை மேற்கொண்டுவிட்டதனாலும், இதுபோதுள்ள ஓரிரு சான்றுகளைமட்டுங் கொண்டு, கழகக்காலத்தில் தாலி ஒரு குலத்தார்க்கும் மங்கலவணியாகவில்லை என்று முழுவுறுதியாய்க் கூறிவிட முடியாது. ஆயின், அது முதற்காலத்தில் அழகு அல்லது காப்புப்பற்றிய பொதுவணியாகவே தோன்றிற்று என்பதும், அது தமிழர் அணியே என்பதும் தெள்ளத் தெளிவாம்.

7. மலையாள நாட்டு மணமுறை

பண்டைச் சேரநாடாகிய மலையாள நாட்டில், ஆரியத் தொடர்பால், மணமுறையில் மிகுந்த மாறுதல்கள் நேர்ந்துள்ளன. சேரநாட்டில் முதன்முதற் குடிபுகுந்த பிராமண வகுப்பாரான நம்பூதிரிமார் தம்மை நிலத்தேவர் (பூசுரர்) என நாட்டி மதத் துறையில் அளவிறந்த தெய்விகச் செல்வாக்குப் பெற்றதுடன், ஆங்காங்குப் பெருநிலக்கிழாரும் குறுநில மன்னருமாய் ஆட்சித்துறையிலும் மிகுந்த அதிகாரத்தைக் கைப்பற்றி, குலவியல் வரிசையில் தம்மைத் தலையாகச் செய்து, சேரநாட்டுப் பழந்தமிழ்க் குடிகளுட் சிறந்த நாயர்குலப் பெண்டிரை, தம்

"