உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 34.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பின்னிணைப்பு

59

விருப்பம்போல் பொறுப்பற்ற முறையில் நுகர்தற்கேற்ற மணமுறைகளை வகுத்துவிட்டனர்.

நம்பூதிரிப் பிராமணர்க்குள் பல மக்களிருப்பின் தலைச்சனுக்கே அல்லது மூத்தவனுக்கே சொத்துரிமையும் மணவுரிமையுமாதலால், அவனுக்கிளை யவரெல்லாம் நாயத்திமாரையே வைப்பு முறையில் மனைவியராக ஆண்டு வந்தனர். ஆயின், அவர்க்குப் பிறக்கும் பிள்ளைகட்குத் தந்தையின் சொத்துரிமை யில்லாததால் மருமக்கட்டாயம் (அம்மான் சொத்துரிமை) நாயர் குலத்தில் ஏற்படுத்தப்பட்டது. பிராமணர் எந்தச் சமையத்திலும் எந்த நாயத்தியையும் நுகருமாறு பல்கணவமும் ஏற்படுத்தப்பட்டது. நாயத்திமார் நாயரையும் பிராமணரையும் மட்டும் மணக்கலாமென்றும், அவருள் பிராமணரை மணப்பது தெய்வத்தை மணப்பது போன்ற பெரும்பேறு என்றும், அதனால் குலம் உயருமென்றும், கருத்துகள் எழுந்தன. பிராமணர் நாயத்திமாரொடு காமநுகர்ச்சியன்றி வேறெவ்வகை உறவுங்கொள்ளாது, அவரைத் தம் இல்லத்திலும் சேர்க்காது, தாம் வேறாகவே வாழ்ந்து வந்தனர். அவருக்கு நாயத்திமாரிடம் பிறக்கும் பிள்ளைகளும், தம் தந்தையரை அறியாது தம் தாயாருடன் தரை என்றும் தரைவாடு என்றும் சொல்லப்படும் நாயர் குடியிருப்புகளில் நாயர் குலத்தினராக வளர்ந்து வந்தனர்.

மணவாது கன்னியாய் இறப்பவள் தீக்கதியடைவாள் என்றொரு மூடநம்பிக்கை நம்பூதிரியராற் புகுத்தப்பட்டுவிட்டதினால், முதலாவது நாயர் குலத்திலும் பின்பு அதனினுந் தாழ்ந்த வேறு சில குலங்களிலும், தாலிகட்டு என்னும் பகடிக்கூத்தான இளமை மணம் ஏற்படுத்தப்பட்டது. இதனால், பெண்வீட்டார்க்குச் செலவும், பிராமணருள்ளிட்ட பிறர்க்கு வரவும் ஏற்பட்டன. தாலி என்னும் மங்கல அணி தன் சிறப்பியல்பை இழந்தது. மகளிர் பூப்படையுமுன் செய்யப்படும் தாலிகட்டு என்னும் மணவினை நாளடைவில் பொருளற்றுப் போய்விட்டதனால், அவர் பூப்படைந்த பின் மீண்டும் ஒரு மணவினை (ஆயின், உண்மையான திருமணம்) நடைபெறலாயிற்று. இது சம்பந்தம் என்னும் வடசொற் பெயரால் வழங்கிவருகின்றது. இங்ஙனம் மணவினை இரண்டாயிற்று.*

தாலிகட்டு

தாலிகட்டு என்னும் மணவினையைப்பற்றி, திரு (K.R.) கிருட்டிணமேனன் கூறிய சான்றியமாக 1894ஆம் ஆட்டை மலபார் மணவிடைக் குழு (Malabar Marriage Commission) அறிக்கையில், வரைந்திருப்பதாவது:

“தாலிகட்டுக் கலியாணம் என்பது, ஒருவகையில், மற்ற மாவட்டங்களில் ஒரு தேவகணிகை (தேவதாசி) அவள் தொழிலைத் தொடங்குமுன், அவட்குச் செய்யப்படும் சடங்கை ஒத்ததாகும். அரசகுடும்பங்களிலும் சில இடைப் * இற்றைத் தமிழ்நாடாகிய சோழபாண்டி நாடுகளிலும், மணவுறவு சம்பந்தம் என்றும், உறவாடி சம்பந்தி என்றும், வடசொல்லால் அழைக்கப் பெறுதல் காண்க. ஆயின், சம்பந்தங் கலப்பவர், தமிழ் நாட்டில் மணமக்களின் பெற்றோராகவும். மலையாள நாட்டில் மணமகனாகவும் கருதப்பெறுவர்.