உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 34.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




60

தமிழர் திருமணம்

பிரபுக்கள் குடும்பங்களிலும் ஒரு சத்திரியன், அல்லது சரணப்பிரிவில் ஒரு நெடுங்காடி, குறிக்கப்பட்ட மங்கலவேளையில் பெண்வீட்டிற்கு அழைக்கப் பட்டுவந்து, நண்பர் முன்பும் குலத்தார் முன்பும் பெண்கழுத்தில் தாலியைக் கட்டிவிட்டு, அதற்குரிய கூலியை வாங்கிக்கொண்டு போய்விடுகின்றான். மற்றப் பிரிவுகளில், பெண்ணின் பிறப்பியம் (சாதகம்) அவளுடைய இனங்கன் குடும்பத்துப் பையன்களின் பிறப்பியங்களோடு ஒப்புநோக்கப்பட்டு, ஒத்த பிறப்பியத்திற்குரிய பையன் தாலிகட்டத் தகுந்தவனாகக் குறிக்கப்படுகின்றான். தாலிகட்டக் கணியனால் ஒருநாள் குறிக்கப்படுகின்றது. பையனின் குடும்பத்துக் கரணவனுக்குச் செய்தியைத் தெரிவிக்கின்றனர். பையனுக்கு அயினியூண் என்றொரு விருந்து அளிக்கப்படுகின்றது. அதிலிருந்து அவன் மணவாளன் அல்லது பிள்ளை என அழைக்கப்படுகின்றான். மணவாளனுக்கு விருந்து நடந்த வீட்டிலிருந்து ஓர் ஊர்வலம் புறப்படுகின்றது. வாளும் கேடகமும் தாங்கிய ஆடவர், ஒருவகைப் போர்க்கூச்சலிட்டுக்கொண்டு ஊர்வலத்தின் முன் செல்கின்றனர். இந்தச் சமையத்தில் பெண்வீட்டிலிருந்தும் இத்தகைய ஆடவரொடும் இத்தகைய கூச்சலொடும் ஓர் ஊர்வலம் கிளம்புகின்றது. பெண்ணின் தரவாட்டைச் சேர்ந்த ஒருவன் ஊர்வலத்தின் முன்வந்து, மணவாளனை எதிர்கொண்டு பெண் வீட்டிற்கு அழைத்துச் செல்கின்றான். அங்கே, பெண்ணின் உடன்பிறந்தான் அவன் பாதங்களைக் கழுவி, ஓர் இணை வேட்டியைப் பெற்றுக்கொள்கின்றான். பின்பு மணவாளனை, மூங்கிற்பாயும் சமுக்காளமும், வெள்ளைத்துணியும் விரித்துள்ள பந்தலின் நடுவிடத்திற்குக் கொண்டுபோய் இருத்துகின்றனர். அதன் பின், பெண்ணின் உடன்பிறந்தான் அவளை வீட்டிற்குள்ளிருந்து தூக்கிக் கொண்டு வந்து, மும்முறை பந்தலை வலம்வந்து மணவாளனின் இடப்புறத்தில் விட்டுவிடுகின்றான். அன்று பெண்ணின் தந்தை கம்பளியிற் கட்டப்பட்ட புத்தாடைகளை, இருவர்க்கும் அளிக்கின்றான். இருவரும், மந்திரவடி என்னும் அப் புத்தாடைகளை அணிந்து கொள்கின்றனர். பின்பு, பெண்ணின் தரவாட்டுக் கரணவன் மனைவி, அதே குலத்தினளாயிருப்பின், பெண்ணைச் சிலம்பு முதலிய அணிகளால் அலங்கரிக்கின்றாள். அதன் பின் இளையாத்து என்னும் ஒரு தாழ்ந்த பிராமண வகுப்பைச் சேர்ந்த புரோகிதன், தாலியை மணவாளனிடம் கொடுக்கின்றான். குடும்பக் கணியன் முழுத்தம் (முகூர்த்தம்) என்று கத்துகின்றான். மணவாளன் தன் வாளை மடியிலிட்டு, தாலியைப் பெண்ணின் கழுத்திற் கட்டுகின்றான். அன்று பெண் ஓர் அம்பையும் ஒரு முகக்கண்ணாடியையும் கையிற் பிடித்துக்கொண்டிருக்கின்றாள். செல்வக்குடும்பங்களில், ஒரு பிராமணி மணமக்களை வாழ்த்திச் சில பாட்டுப் பாடுகின்றாள். அவளை அமர்த்த முடியாத எளிய குடும்பங்களில், பாட்டில் தேர்ச்சி பெற்ற ஒரு நாயன் அப் பணியை ஆற்றுகின்றான். பின்பு இனங்கர் மணவாளனையும் பெண்ணையும், வீட்டிற்குள் சுவடிக்கப்பட்ட ஓர் அறைக்குத் தூக்கிக்கொண்டு போகின்றனர். அங்கே அவர்கள் ஒருவகைத் தீட்டுநிலையில் முந்நாளைக் கழிக்கின்றனர். நாலாம் நாள், இருவரும், அருகிலுள்ள நீர்நிலையில், ஒருவர் கைகளை ஒருவர் பிடித்துக் கொண்டு நீராடுகின்றனர். நீராடி ஆடைமாற்றியபின், ஊர்வலத்தின் பின்னாக வீடு

6