உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 34.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




64

தமிழர் திருமணம்

“நெஞ்சுதளை அவிழ்ந்த புணர்ச்சிக் கண்ணும் - களவிற் புணர்ச்சி போலுங் கற்பினும் மூன்றுநாளுங் கூட்டமின்மையானும் நிகழ்ந்த மனக்குறை தீரக்கூடிய கூட்டத்தின் கண்ணும்:

66

'அது நாலாம் நாளை யிரவின் கண்ணதாம்,

“அல்லல்தீர ஆர்வமொடு அளைஇச் சொல்லுறு பொருளின் கண்ணும் வரைந்த காலத்து மூன்றுநாட் கூட்டமின்மைக்குக் காரணமென்னென்று தலைவி மனத்து நிகழாநின்ற வருத்தந் தீரும்படி மிக்க வேட்கையோடு கூடியிருந்து, வேதஞ் சொல்லுதலுற்ற பொருளின்கண்ணும்: தலைவன் விரித்து விளங்கக்கூறும்.

"அது முதனாள் தண்கதிர்ச் செல்வற்கும், இடைநாள் கந்தருவர்க்கும், பின்னாள் அங்கியங் கடவுட்கும் அளித்து, நான்காநாள் அங்கியங் கடவுள் எனக்கு நின்னை அளிப்ப யான் நுகரவேண்டிற்று; அங்ஙனம் வேதங் கூறுதலால் எனத் தலைவிக்கு விளங்கக் கூறுதல். உதாரணம் இக்காலத்தின்று.

இங்குக் கூறியவாற்றால், நம்பூதிரிமார் மதியாழோர் தீயின் பெயரால் செய்து வந்த ஏமாற்றைக் கண்டுகொள்க.

=

(இனங்கன் = ஒத்தவன் = முறைகாரன், கரணவன் =

தலைவன்).

நாயர் குடும்பத்

குறிப்பு: 'மலையாளநாட்டு மணமுறை' என்னும் இப் பின்னிணைப்பிற் கூறியவெல்லாம், 'தென்னிந்தியக் குலங்களும் மரபுகளும்' என்னும் நூலினின்று கொண்டு கூறியவாகும். அந் நூல் இந் நூற்றாண்டுத் தொடக்கத்தில் தொகுக்கப் பெற்றதாதலின், அதிற் கூறப்பட்டுள்ள பல செய்திகள் இன்று பழங்கதையாய்ப் போயின. மலையாள நாடு இன்று கல்வியிலும் கைவினையிலும் தலைசிறந்து விளங்குகின்றது. நாயர்குலப் பெருமக்களும், தன்மானவுணர்ச்சி பொங்கிப் பிராமணியத்தை எதிர்த்து, நாகரிகப் பண்பாட்டுடன் வாழ்ந்து வருகின்றனர். தாலிகட்டு அருகியும், மருமக்கட்டாயம் மக்கட்டாயமாக மாறியும் வருகின்றன.

7