உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 34.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பின்னிணைப்பு

63

ளிருக்கும்போது மற்றொரு கணவன் புகுவதில்லை. ஒருவன் வீட்டிற்குள்ளிருக் கிறான் என்பதற்கு, அவன் வாயிலருகே விட்டுவைத்திருக்கும் வாளும் கேடகமும் அடையாளம். ஒவ்வொருவனும் தன் நாயத்தியொடு கூடியிருக்குங் காலத்தில், அவள் வாழ்க்கைச் செலவைத் தருதல் வேண்டும். ஒரு பிள்ளை பிறப்பின் அதற்குத் தந்தையைக் குறிப்பது நாயத்தியே. பிள்ளைகட்குத் தாயோடன்றித் தந்தையொடு தொடர்பில்லை. அவர்கட்கு அம்மான் சொத்தே உரிமையாகும். ஒரு நாயத்தி எந்தச் சமையத்திலும் ஒரு கணவனைத் தள்ளிவிடலாம். இத் தள்ளுதல் உரிமை கணவனுக்குமுண்டு. புதுவுறவு கொள்ளும் உரிமையும் இருவர்க்கும் பொதுவாம்.

முன்னுகர்ச்சி (Prelibation)

நம்பூதிரிப் பிராமணர், இடைக்காலத்தில், நாயத்திமாரைத் தாராளமாய்ப் பெண்டாள்வதற்கு மட்டுமன்றி, அவரை முதலில் நுகர்தற்கும் வழி வகுத்திருந்ததாகக் தெரிகின்றது.

ஆமில்தன் (Hamilton) என்பவர், தம் ‘கிழக்கிந்தியத் தீவுகளின் புது வரலாறு' (New Account of the East Indies) என்னும் நூலில், பின்வருமாறு வரைந்திருக்கின்றார்:

சாமொரின் (Zamorin) மணக்கும்போது, மணமகளை நம்பூதிரி அல்லது தலைமைப் புரோகிதன் நுகரும்வரை, முந்நாள் அவளொடு கூடக்கூடாது. நம்பூதிரி தன் விருப்பப்படி, அவளோடு முந்நாள் கூடலாம். ஏனெனின், முதனுகர்ச்சி அவளது தெய்வத்திற்குத் திருக்காணிக்கையாகப் படைக்கப்படல் வேண்டும்.*

மலபார் மணவிடைக் குழுவுறுப்பினரான விந்தர் பாதம் (Winterbotham) என்பவர், தாலிகட்டு வினையைப் பிராமணன் புரிவது, முன் காலத்தில் நம்பூதிரிமார் பெற்றிருந்த முதனுகர்ச்சியுரிமையின் எச்சக்குறி என்று கொள்வர். நம்பூதிரிமாராற் பெண்மை தொடங்கி வைக்கப் பெறுவது, நாயத்திமாரின் சிறந்த பேறென்று கருதப்பட்டது.

இதனை உட்கொண்டே, “கரணத்தி னமைந்து முடிந்த காலை” என்னும் கற்பியல் நூற்பாவின் (5) இரு தொடர்கட்கு, நச்சினார்க்கினியர் பின்வருமாறு நலிந்தும் வலிந்தும் நச்சுத்தன்மையான உரை வரைந்திருக்கின்றனர்.

66

'கரணத்தின் அமைந்து முடிந்த காலை - ஆதிக்கரணமும் ஐயர் யாத்த கரணமுமென்னும் இருவகைச் சடங்கானும் ஓர் குறைபாடின்றாய் மூன்று இரவின் முயக்கம் இன்றி ஆன்றோர்க்கு அமைந்த வகையாற் பள்ளிசெய்து ஒழுகி நான்காம் பகலெல்லை முடிந்த காலத்து:

ஆன்றோராவார், மதியுங் கந்தவரும் அங்கியும்.

  • தென்னிந்தியக் குலங்களும் மரபுகளும், ப. 326