உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 34.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




62

தமிழர் திருமணம்

விளக்கப்பட வேண்டுவதன்று. பிராமணர் சம்பந்தம் என்னும் ஒரே வட சொல்லை ஆண்டுவரினும், நாயரிடையே, புடமுறி அல்லது புடவைக் கொடை, ஊழம் பொறுக்குகை (முறைவரும்வரை காத்திருத்தல்), வீடாரம் கயறுகை (மனைவியின் வீடு புகுதல்), கிடக்கறை (பள்ளியறை)க் கலியாணம், முதலியன வாக வெவ்வேறு தமிழ்ப் பெயர்கள் ஆங்காங்கு வழங்கி வருகின்றன. இப் இ பெயர்கள் இடவேறுபாடு மட்டுமன்று, வகை வேறுபாடும் பற்றியனவாகும். நாயர் திருமணவகைகளுள் மிகுந்த செலவானது புடமுறி என்பதே. இவ் வகைப்படி திருமணம் செய்த கணவனே, தன் மனைவியைத் தன் வீட்டிற்கு அழைத்துச் செல்ல முடியும். ஏனைவகைப்படி செய்தவரெல்லாம், மனைவி வீட்டிற்கே சென்று வரல் வேண்டும். முதலில் வேறுவகையால் மணந்தவன் பின்பு செல்வநிலை யுயர்ந்த பின் புடமுறி வகையுஞ்செய்து தன் மனைவியைத் தன் இல்லத்திற்கு அழைத்துக்கொள்ளலாம். இது பல பிள்ளைகள் பிறந்தபின் நிகழ்வதுமுண்டு.

எல்லாத் திருமண வகைகட்கும் பொதுவான நிகழ்ச்சிகள், மணமக்களின் பிறப்பியம் பார்த்தல், மணவுறுதிப்பேச்சு, முழுத்தங் குறித்தல், மணவிழாக் கொண்டாட்டம், கரணம், பிராமணர்க்குத் தானம், திருமணவிருந்து, மணமக்கள் கூட்டம் என்பனவாகும்.

பல்கணவம்

சேரர் மரபு அற்றுப்போய்ச் சேரநாட்டிற்குச் சோழ பாண்டி நாட்டொடு தொடர்பு நீங்கியதிலிருந்து, பதினெட்டாம் நூற்றாண்டுவரை, நாயர் குலத்திற் பல்கணவம் கையாளப்பட்டு வந்ததாகத் தெரிகின்றது.

திப்பு கல்தான், 1788ஆம் ஆண்டில், இன்று கள்ளிக்கோட்டை எனத் தமிழ்நாட்டில் வழங்கும் கோழிக்கோட்டிற்குச் சென்றிருந்தபோது, நாயர்குலப் பல்கணவத்தைக் கண்டித்துப் பின்வருமாறு ஒரு கட்டளை யறிக்கை பிறப்பித்ததாகச் சொல்லப்படுகின்றது.

"ஒருத்தி பத்து ஆடவரொடு கூடி வாழ்தல் உங்களிடை வழக்க மாகையாலும், உங்கள் தாய்மாரையும் உடன்பிறந்தாள்மாரையும் அவர்கள் கெட்ட பழக்கங்களிற் கட்டுப்பாடின்றி நீங்கள் விட்டுவிடுவதாலும், உங்கள் மணவுறவுகளில் வெளிநிலத்து விலங்குகளினும் நாணமின்றி நடந்துகொள் வதாலும் இக் கரிசான பழக்கங்களை விட்டுவிட்டு ஏனை மக்களைப்போல் நீங்கள் வாழவேண்டுமென்று, இதனால் தெரிவிக்கின்றேன்.”*

க்

பல்கணவ முறைப்படி, இடைக்காலத்தில் ஒவ்வொரு நாயத்தியும், இருவர் முதல் பன்னிருவர்வரை பல கணவரொடு கூடி வாழ்ந்தாள். ஒவ்வொரு கணவனும், மணந்த வரிசைப்படி முறைகொண்டு, ஒப்பந்தத்திற்கேற்ப ஒரு நாளோ பலநாளோ தன் நாயத்தியொடு கூடியிருப்பான். ஒரு நண்பகலிலிருந்து மற்றொரு நண்பகல்வரை ஒரு நாட்கணக்காகும். ஒரு கணவன் வீட்டிற்குள்

தென்னிந்தியக் குலங்களும் மரபுகளும் (Castes and Tribes of Southern India

ப. 311