உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 34.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தமிழ்த்தாய் வாழ்க

பதிப்புரை

"தேமதுரத் தமிழோசை உலகமெலாம்

பரவும்வகை செய்தல் வேண்டும்!"

(பாரதி)

தமிழக இளைஞர் மன்றத்தின் முதலாவது வெளியீடாகிய தமிழர் சரித்திரச் சுருக்கமென்னும் இந் நூலை தமிழ்த்தாயின் இணையடிகளில் வைத்து இறைஞ்சுகின்றோம். இந் நூல் படைப்புக்காலந் தொடங்கித் தமிழரது சரித்திரத்தை நுண்ணாராய்ச்சியுடன் சுருக்கமாகக் கூறுகிறது.

இக் குறுஞ்சுவடி, ஆராய்ச்சித்திறன் வாய்ந்தவரும், மொழிநூற் பண்புணர்ந்தவரும் ஆகிய வித்துவான் ஞா. தேவநேயப் பாவாணர் அவர்கள் தமது அரிய உழைப்பால் கைம்மாறு கருதாது எம் மன்றத்திற்கு எழுதி உதவியமைக்கு மன்றத்தினர் என்றும் கடப்பாடுடையோம்.

இவ் வெளியீட்டின்பொருட்டு உழைத்து, இதனை விரைந்து வெளியாக்க உதவிய அன்பர்கள் பலர்க்கும் இம் மன்றத்தின் நன்றி உரியதாகுக.

"தொல்லை வினைதரு தொல்லை யகன்று சுடர்க தமிழ்நாடே!'