உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 34.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தமிழர் சரித்திரச் சுருக்கம்

73

உறுப்பினரால் இயற்றப்பெற்றவை பதினெண் மேற்கணக்கும் பதினெண் கீழ்க்கணக்கிற் பலவும் கூத்தும் வரியும் சிற்றிசையும் பேரிசையும் முதலியன. அவர்க்கு இலக்கணம் அகத்தியமும் தொல்காப்பியமும். கழகம் நடந்து வந்த காலம் 1850 ஆண்டு. கழகத்தை நடத்தியவர் முடத்திருமாறன் முதல் உக்கிரப் பெருவழுதிவரை 49 பேர். அவருட் பாவரங்கேறினவர் மூவர். கடைக்கழகத் தின் கடைசிக்காலம் கி.பி. 2ஆம் நூற்றாண்டு. அப்போதும் ஒரு கடல்கோள் நிகழ்ந்து காவிரிப்பூம்பட்டினத்தையும் வங்காளக்குடாக் கடலிலும் இந்துமாக் கடலிலும் உள்ள சில நிலப்பகுதிகளையும் முழுக்கிவிட்டது. குமரியாறு முழுகி இலங்கையும் குறுகிற்று.

கடைக்கழகக் காலத்திலேயே, ஆரியர் தமிழில் நூலியற்றவும் வடசொற்களைத் தமிழிற் புகுத்தவும் தொடங்கிவிட்டனர். சில தமிழரசர் ஆரிய வேள்விகளை வேட்டனர். தமிழரின் இருவகைச் சடங்குகளும் பார்ப்பனரால் வடமொழியில் நடைபெற்று வந்தன. கடைக்கழகத்தின் பின் பாண்டியர் தமிழ் வளர்ப்பைக் கைநெகிழவிட்டனர்.

3. இடைக்காலம் (கி.பி. 300 -1600)

கழகக் காலத்தின்பின் ஆரியம் தலையெடுத்தது. அதனால் தமிழ நாகரிகம் மங்கிவந்தது. ஆரியக்குல வேற்றொழுக்கம் (வரணாச்சிரம தருமம்) புகுத்தப்பட்டுத் தமிழர் முற்றிலும் ஆரியர்க்கு அடிமையராயினர். பிறப்பால் சிறப்பு ஏற்பட்டது. முதலிடை கடையாகிய முத்திறத் தமிழரும் ஆரியரால் தீண்டவும் அண்டவும் காணவும் பெறாதவராயினர்.

தமிழர் உயர்நிலைக் கல்வியிழந்தனர். பல புலவர் வழிமுறைகள் அற்றுப்போயின. பல தமிழ்நூல்களும் சொற்களும் மறைந்தன. தமிழ் பெருமையும் தூய்மையு மிழந்தது அரிய கலைகள் மறைந்து மதநூலும் புராணமும் புகழ்நூலுமே இயற்றப்பட்டன.

தாழ்த்தப்பட்டோர் கல்வியிழந்து விலங்கினும் இழிவாய் நடத்தப் பட்டனர். தமிழ்நாட்டில் ஒற்றுமை குன்றி, பல்லவர் தெலுங்கர் துலுக்கர் மராட்டியர் முதலிய பிறநாட்டார் தமிழ்நாட்டைக் கைப்பற்றினர்.

கி.பி. 10ஆம் நூற்றாண்டிலிருந்து 12ஆம் நூற்றாண்டுவரை சோழநாட்டில் மட்டும் தமிழுக்குச் சிறிது ஆதரவு கிடைத்தது.

தமிழர் சரித்திரத்தில் மிகமிக இருண்டகாலம் 15ஆம் நூற்றாண்டென்று

சொல்லலாம்.

4. தற்காலம் (கி.பி. 1600 முதல் )

ä)

ஆங்கிலேயர் தமிழ்நாட்டிற்கு வந்தபின், ஒரு பெரிய மாறுதல் ஏற்பட்டது ஒரு புத்தூழி தோன்றிற்று. பலகுலத்தாரும் கல்வியும் அலுவலும் பெற்றனர். எல்லார்க்கும் ஒரே நீதி வழங்கப்பெற்றது. தீண்டாதார் மேலாடையணியவும்