உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 34.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




72

தமிழர் திருமணம் ஆசிரியப்பா முதலிய அறுவகைச் செய்யுள்களும், தாஅவண்ணம் பாஅவண்ணம் முதலிய இருபான் வண்ணங்களும், வேறெம்மொழிக்கும் இல்லாத பொருளிலக்கணமும், இயல் இசை நாடகம் என்னும் முத்தமிழ்ப் பகுதிகளும், தோல் தொன்மை முதலிய எண்வகைத் தொடர்நிலைச் செய்யுள் (காவியம்) களும், ஓவியம் (சித்திரம்) சிற்பம் கணிதம் கணியம் (ஜோதிடம்) தருக்கம் மந்திரம் மருத்துவம் யோகம் முதலிய கலைகளும், நீர்நூல் நிலநூல் மறநூல் மனைநூல் பரிநூல் மறைநூல் மெய்ப்பொருள் (தத்துவ) நூல் முதலிய நூல்களும் அவர்கள் பயின்றும் இயற்றியும் வந்தனர். சைவமும் மாலிய (வைஷ்ணவ)மும் உயர்ந்தோர் மதங்களாயிருந்தன. கரி (யானை) பரி (குதிரை) தேர் கால் என்னும் நால்வகைப் படைகளால் போர்செய்து வந்தனர். சிறந்த ஒழுக்கம் அவர்கட்கிருந்தது. மானத்தையும் நீதியையும் உயிரினும் சிறப்பாக மதித்தனர். பருத்திப் பஞ்சால் சிறந்த ஆடைகளை நெய்தனர். முத்து, பொன், பஞ்சாடை, தேக்கு, அகில், இஞ்சி, மிளகு முதலிய பல பொருள்களை அயல் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தனர். நிலவாணிகம், நீர்வாணிகம் என்னும் இரண் டும் சிறந்திருந்தன. வேளாண்மை தாளாண்மை என்னும் இரு குணங்களில்

அவர்கட்குஇணையில்லையென்னலாம்.

(2) இடைக்கழகம் : பாண்டிநாட்டின் பெரும் பகுதியைக் கடல் கொண்டபின், சயமாகீர்த்தி யென்னும் (மறுபெயர் கொண்ட) நிலந்தரு திருவிற் பாண்டியன் வடக்கே வந்து சேர சோழ நாடுகளில் சில பகுதிகளைக் கைப்பற்றி, கீழ்கரையில் கபாடபுரம் (அலைவாய்?) என்னும் துறைநகரைத் தலைநகராக்கி, அதில் இடைக்கழகத்தை நிறுவினான். அக் கழகத்தில் அகத்தியரும், அவருடைய மாணவரும் இருந்தனர். அம் மாணவருள் தலைவராகிய தொல் காப்பியர் இயற்றிய தொல்காப்பியம் என்னும் இயற்றமிழ் இலக்கணம் அக் கழகத்தில் அரங்கேற்றப்பட்டது. கழக வுறுப்பினரால் இயற்றப்பெற்ற நூல்கள் கலி குருகு வெண்டாளி வியாழமாலை யகவல் முதலியன. அவர்க்கு நூல் அகத்தியமும் தொல்காப்பியமும் மாபுராணமும் இசைநுணுக்கமும் பூத புராணமும். கழகத்தை நடாத்தியவர், வெண்டேர்ச்செழியன் முதல் முடத் திருமாறன் வரை 59 பேர். அவருட் பாவரங்கேறினவர் ஐவர்.

இடைக்கழகக்காலத்தில் முத்தமிழும் வேறுவேறாகப் பிரிந்துவிட்டன. இடைக்கழகத் தொடக்கக்காலமே இராமர் தென்னாடு வந்ததாகலாம். (கி.மு. சுமார் 2500 - 2000).

இடைக்கழகம் பல நூற்றாண்டுகள் நடந்தபின் கபாடபுரத்தையுங்

கடல்கொண்டது.

அதன்பின் இற்றை மதுரைக்குக் கிழக்கிலுள்ள மணவூர் பாண்டியன் தலைநகராயிற்று. அங்குச் சித்திரவாகனன் ஆண்டுகொண்டிருக்கும்போது அருச்சுனன் தென்னாட்டுத் திருநீராட வந்தான். (கி.மு. சுமார் 1500 -1000).

(3) கடைக்கழகம்: சிறிது காலத்திற்குப்பின் வையைக்கரையில் இற்றை மதுரை கட்டப்பட்டது. அதில் கடைக்கழகம் நிறுவப் பெற்றது. அதன்