உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 34.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தமிழர் சரித்திரச் சுருக்கம்

71

நகரமும் பட்டினமும் பெரு நிலப்பரப்பை யுடையனவாதலால் அவற்றெல்லையில் ஐந்திணையும் மயங்கித் திணைமயக்கம் தோன்றிற்று.

2. கழகக்காலம்

(1). தலைக்கழகம்: தலைக்கழகக் காலத்தில், குமரிமுனையிலிருந்து சுமார் 5000 கல் தொலைவரை தெற்கே ஒரு நிலப்பரப்பிருந்தது. அது பண்டைப் பாண்டியநாட்டின் பெரும் பகுதி. அதன் தென்பாகத்தில் பஃறுளி என்னும் ஆறும் வடபாகத்தில் குமரி என்னும் ஆறும் ஓடிக்கொண்டிருந்தன. இவற்றுக்கிடையில் எழுநூற்று காத*வழியும் ஐம்பது நாடுகளும் பல ஆறுகளும் நகரங்களும் இருந்தனவென்று அடியார்க்குநல்லார் கூறுவர்.

குமரியாறு குமரி (மகேந்திரம்) யென்னும் மாபெரு மலைத்தொடரினின்று பிறந்தது. இப்போது மேற்குத் தொடர்ச்சிமலை யென்றும் கடைக்கழக நூல்களில் குடமலையென்றும் வழங்கும் மலைத்தொடர், அக்காலத்தில் வடமலையென்றும் வட பெருங்கோடு என்றும் அழைக்கப்பட்டது. இலங்கை அக்காலத்தில் இந்தியாவொடு சேர்ந்தும், பொருநை (தாமிரபரணி) இலங்கையூடு சென்றும் இருந்தது.

பஃறுளி யாற்றங்கரையில் மதுரை யென்னும் நகரம் பாண்டியன் தலை நகரா யிருந்தது. அதில் தலைக்கழகம் ஏற்படுத்தப்பட்டது. அதன் உறுப்பினரால் இயற்றப்பெற்ற நூல்கள் பரிபாடல் முதுநாரை முதுகுருகு களரியாவிரை முதலியன. கழகமிருந்தது 4440 ஆண்டுகள். கழகத்தை நடாத்திவந்த பாண்டியர் காய்சின வழுதி முதல் கடுங்கோன் வரை 89 பேர். அவருட் பாவரங்கேறினவர் எழுவர். தலைக்கழகத்திற்கு முன்னிருந்த பாண்டியர் பெயர் தெரியவில்லை.

தலைக்கழகக்காலத்தின் இறுதிக்காலத்தில் அகத்தியர் வடநாட்டினின்று தென்னாடுவந்து, தமிழைக் கற்று, முதனூல்களைத் தழுவித் தம் பேரால் அகத்தியம் என்றொரு வழிநூல் செய்தார். அது இயல் இசை நாடகம் என்னும் மூன்றையும் கூறும் முத்தமிழிலக்கண நூல், அக்காலத்தில் தமிழர்க்கு அறிவு ஆற்றல் வாழ்நாள் முதலியன மிக்கிருந்ததால், ஒரு புலவரே முத்தமிழையுங் கற்கமுடிந்தது.

அகத்தியர் வந்து சில அல்லது பல ஆண்டுகட்குப்பின் ஒரு கடல்கோள் நிகழ்ந்து குமரியாற்றிற்குத் தெற்கில் ஒரு நிலப்பகுதியைக் கொண்டு விட்டது. அதில் பஃறுளியாறும் குமரிமலைத்தொடரின் தென்பகுதியும் அடங்கிவிட்டன. இலங்கை தமிழகத்தினின்றும் பிரிந்து விட்டது.

தலைக்கழகக் காலத்தில் தமிழர் உயர்தர நாகரிகத்தை அடைந்திருந்தனர். அது (தமிழகத்தில்) ஆரியர் என்ற பேரையு மறியாத தனித்தமிழர் வாழ்ந்த காலம். அன்று அகழி சூழ்ந்த அரணான நகரங்கள் அரசர் தலைநகரங்களா யிருந்தன. கருங்கல்லும் சாந்துங்கொண்டு மாடமாளிகைகளும் கூடகோபுரங் களும் உரைநடையிலும், செய்யுளிலும் அவர்கட்கு நூல்களிருந்தன. ஆயினும், செய்யுள், சிறந்ததாதலின், அதிலேயே பெரும்பாலும் நூலியற்றினர். வெண்பா * அக்காலத்தில் ஒரு காதம் எவ்வளவு தொலையென்று தெரியவில்லை