உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 34.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




70

தமிழர் திருமணம் கிணையும்; தொழில், நடுதலும் களையெடுத்தலும் அரிதலும் கடாவிடுதலும்; யாழ், மருதயாழ்; பூ, தாமரையும் கழுநீரும்; நீர்நிலை, ஆறும் மனைக்கிணறும் ஏரியும்; ஊர், ஊர் என்று சிறப்பாய் அழைக்கப்படுவன.

திணைநிலை மக்கள் சிலகாலம் பிற திணையாருடன் கூடாமல் தனித் தொகுதிகளாய் வாழ்ந்து, பின்பு உணவுபற்றிக் கூட்டுறவு கொண் டிருக்கின்றனர். குறிஞ்சி மக்கள் முத்து இறைச்சியையும், முல்லை மக்கள் மோர் தயிர் நெய்யையும், நெய்தல் மக்கள் மீன் உப்பு முத்தையும் மருதமக்களிடம் கொண்டு வந்து நெல்லுக்கு மாற்றுவதும், பாலை மக்கள் பிற நான்கு திணைகளுக்கும் சென்று கொள்ளையடிப்பதும் திணையிடை யுறவுக்கு எடுத்துக்காட்டாம்.

(3) ஐந்நாகரிக நிலை: மனித நாகரிகம், குறிஞ்சிநிலை முல்லைநிலை மருதநிலை நகரநிலை பட்டினநிலை என ஐந்து நிலைகளையுடையது; ஆயினும் நகரநிலையில்தான் சிறப்பாய்த் தொடங்கும் நாகரிகம் என்ற சொல்லே நகர் என்பதன் அடிப்பிறந்ததுதான். நகர்+ அகம் = நகரகம் > நகரிகம்> நாகரிகம்.

மலையிலும் மரத்திலும் தங்கி, விலங்கு பறவைகளின் இறைச்சியைப் பச்சையாய் உண்டு அம்மணமாய்த் திரிந்த அநாகரிக மனிதன்: இலையையும் தோலையும் உடுப்பதும், பரண்களிலும் குடில்களிலும் உறைவதும், பன்றி முண்டியவிடத்தில் தினைவிதைத்து வானாவாரியாய் விளைவிப்பதும், உணவுப்பொருள்களை வறுத்தும் சுட்டும் தின்பதும் குறிஞ்சி நாகரிகமாகும்; ஆடுமாடுகளை வளர்த்து அவற்றின் ஊனையும் பாலையும் உண்பதும், சோளம் கம்பு போன்ற புன்செய்க் கூலங் (தானியம்) களை விளைப்பதும், ஆட்டு மயிராடை யுடுப்பதும், சிற்றில்களில் உறைவதும் முல்லை நாகரிகமாகும்.

நெல் கரும்பு முதலிய நன்செய்ப்பயிர்களை விளைப்பதும், நிலையாக ரிடத்திற் குடியிருப்பதும், மெல்லிய நெசவாடைகளை யுடுப்பதும், உயிர் பொருட் பாதுகாப்பிற்குக் காவல் ஏற்படுத்துவதும், மருதநாகரிமாகும்; வாணிகமும் அரசியலும் நூற்கல்வியும் தோன்றி முன்பு உழவரென்னும் ஒரே வகுப்பாயிருந்த மருதநிலமக்கள் பின்பு வேளாளர் வணிகர் அரசர் அந்தணர் என்னும் நாற்பாலாய்ப் பிரிவதும், அதன்பின் கொல் தச்சு நெசவு முதலிய மேல்தொழில்கட்கும், சலவை மயிர்வினை தோல்வினை முதலிய கீழ்த்தொழில் கட்கும் மக்கள் பிரிந்துபோவதும், இங்ஙனம் பல குலங்கள் தோன்றுவதும், ஓவிய உணர்ச்சியுண்டாவதும், மாடமாளிகைகள் கூடகோபுரங் கள் எழுவதும் ஊர் பெருநகராவதும் இசை நாடகம் சிறப்பதும் பலகலைகள் வளர்வதும் வணக்கங்கள் மதங்களாக விரிவதும் நகர நாகரிகமாகும். அதன்பின், நெய்தல்நிலத்தில் துறைமுகங்கள் தோன்றிப் பட்டினங்களாவதும் நீர் வாணிகம் நடப்பதும், கடற்படை அமைவதும், அயல்நாடுகள் அடிப்படுவதும், பட்டின நாகரிகமாகும்.

இவ் வைந்நிலை நாகரிகமும் கழகக்காலத்திற்கு முன்னரேயே தமிழர் அடைந்துவிட்டனர். தமிழ்நாடு முழுவதும் சேர சோழ பாண்டியராகிய மும்முடி மன்னரால் ஆளப்பட்டு வந்தது. அம் முத்தமிழ் அரசர் குடிகளுள், முதலாவது தோன்றியது பாண்டியர்குடி, பின்பு சோழர் குடி, அதன்பின் சேரர்குடி.