உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 34.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




நல்லதே.

1. மதப் பைத்தியம்

கடவுளை வணங்குவதும் மதவொழுக்கத்தில் உறைத்து நிற்பதும்

"கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன்

நற்றாள் தொழாஅர் எனின்

99

என்றார் திருவள்ளுவர், “ஆண்டவனுக் கஞ்சுவதே அறிவின் தொடக்கம்” என்றார் சாலோமோன் அறிஞர். ஆனாவல், அளவிறந்த மதப்பித்துக்கொண்டு எங்கே விழுந்து சாகலா மென்று முட்டிக்கொண்டு திரிய, ஒருவருஞ் சொல்லவில்லை. “அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு என்பது மதப்பற்றிற்கும் ஏற்கும்.

பொதுவாக ஒரு மதம் ஏற்படும்போது, அதன் அடியார்கள் அல்லது அதை ஏற்படுத்துவோர் தங்கள் மதக் கருத்துகளையும், தங்கள் முன்னோரைப் பற்றிய சில சரித்திரப் பகுதிகளையும் தொகுத்து நூல்கள் எழுதிவைக்கிறார்கள். அல்லது பாட்டுப் பாடி வைக்கிறார்கள். அவை அம் மதத்திற்கு மறை(வேத) நூல்களாகின்றன. அவற்றில், கலையியல் உண்மைக்கு மாறான சில கருத்துகள் இருக்கலாம்; கலை வரவர வளர்ந்து வருகிறது. கலை வளர்ச்சியடைந்த காலத்தில், அதன் உண்மைக்கு மாறான கருத்துகள் மறைநூல்களில் இருக்குமானால், அவற்றை விலக்கிக் கொள்ளுவது கடமையாகும், மனிதனுக்கு மதமேயன்றி மதத்திற்கு மனிதன் அல்லன். மறைநூலும் கடவுளால் தோன்றியதே; கலைநூலும் கடவுளால் தோன்றியதே. அறிவு பலதுறைப்பட்டது. கடவுளே அறிவுக்கு உறைவிடம். அவர் சித்தாந்த வறிவை மனிதர்க்குப் புகட்டியது போலவே கலையறிவையும் புகட்டிவருகிறார். மறைநூலாசிரியரைப் போன்றே, கலைநூலாசிரியரும் கடவுளடியார்கள். ஓர் இசைப்புலவன் எத்துணை வல்லவனா யிருப்பினும், கருவியின் சிறப்புக்குத் தக்கபடியே தன் திறமையைக் காட்ட முடியும். அதுபோலக் கடவுளே அறிவித்தாலும், அது அடியாரின் அறிவுக்கும் திறமைக்கும் தக்கபடியே வெளிப்படும். ஒவ்வொரு துறையிலும் மனிதன் தன் அறிவை வளர்த்துவருகிறான். அறிவு வளரவளரத் தன் கருத்துகளைத் திருத்திக்கொள்ள வேண்டும். தன் அறியாமையை மதத்தின் மேலேற்றி மதநூலைக் கலைநூலோடு முரண்படக் கூறின், கடவுளின் தன்மைக்கே முரண் பாடு கூறியதாகும். அதோடு கலையும் வளராது, நாடும் கீழ் நிலை யடையும்; அறியாமையும் அடிமைத்தனமும் ஓங்கும்.

சில மதநூல்களில், அவற்றை எழுதியவரின் அறியாமையாலோ தன்னலத்தாலோ, மன்பதைய (சமுதாய) முன்னேற்றத்திற்குத் தடையாயுள்ள சில