உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 34.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




84

தமிழர் திருமணம்

தீய கருத்துகள் புகுத்தப்பட்டுள்ளன. பிறப்பாற் சிறப்பென்பதும் தாழ்த்தப் பட்டோர்க்குக் கோயிற்புகவு (ஆலயப்பிரவேசம்) இல்லையென்பதும் இத்தகையன. இதனால்தான், மக்கள் முன்னேற்றத்திற்கு மதம் முட்டுக்கட்டை எனச் சிலர் கருதுகின்றனர்.

கடவுள் மக்களெல்லாருக்கும் தந்தை. அவர் மக்களின் அகத் தூய்மையைக் கவனிக்கின்றாரேயன்றிப் புறத்தூய்மையைக் கவனிக்கிறதில்லை. கடவுள் தாழ்த்தப்பட்டோரை ஏற்றுக்கொள்ளத் தயாராயிருப்பவும், தொழுகை யாசிரியர் (அர்ச்சகர்) அவர்களை மறுப்பது ‘சாமி வரங்கொடுத்தாலும் பூசாரி வரங்கொடுக்க மாட்டான்' என்னும் பழமொழியையே விளக்குகின்றது.

சிவனடியாருள் சிறந்தவராகச் சொல்லப்படும் அறுபத்துமூவருள், இயற்பகை நாயனார் சிவனடியார் போல வேடம்பூண்டு வந்த ஒருவனுக்குத் தம் மனைவியைக் கொடுத்ததுமல்லாமல் அதைத் தடுக்க வந்த தம் இனத்தாரை யெல்லாம் வெட்டிக் கொன்று முன்பின் அறியாத அக் காமுகனை ஊருக்கு நெடுந்தூரம் யாதோர் இடையூறுமின்றிக் கூட்டிக்கொண்டு போயும் விட்டனர். இது ஒரு பெரிய மானக்கேடு. ஏனாதிநாத நாயனார் தம் எதிரியாகிய அதி சூரனோடு வாட்போர் செய்யுங்கால், அவன் வஞ்சனையால் நீற்றைப் பூசி நெடு நேரம் கேடகத்தால் மறைத்து வைத்திருந்த தன் நெற்றியைத் திடீரென்று காட்ட, அவர் “ஆ கெட்டேன்! இவர் பரமசிவனுக்கு அடியவராய்விட்டார்” என்று வாளையும் கேடகத்தையும் விட்டுவிடக் கருதிப் பின்பு, “ஆயுத மில்லாதவரைக் கொன்ற குற்றம் இவரை அடையாதிருக்க வேண்டுமென்று” எண்ணி, அவற்றை விடாமல், உண்மையில் எதிர்ப்பவர் போல நடித்து நேரே நிற்க, பழிகாரனாகிய அதிசூரன் அவரை வெட்டிக் கொன்றான். மெய்ப்பொருள் நாயனார் சிவனடியார் போல வேடம் பூண்டு வந்த தம் பகைவனாகிய முத்தநாதனாற் குத்துண்டிறக்கும் போதும், அவனைச் சேதமின்றி ஊருக்கு வெளியே கொண்டுபோய் விடும்படி தம் வாயிற்காவலனாகிய தத்தனுக்குக் கட்டளையிட்டார். இவைபோன்ற சிவனடியார் சரிதங்கள் இன்னும் பலவுள. இவற்றால், சிவனடியாரான தமிழர் தம் உயிரையும் மானத்தையும் பொருட் படுத்தாமல் மதப்பித்தங்கொண்டு பகைவருக்குக்கூட எதையும் கொடுக்கத் தயாராயிருந்தனர் என்பது வெளி யாகும். இயற்பகை நாயனார் சரிதம் பெரிய புராணத்தில் மங்கல முடிவாக மாற்றிக் கூறப்பட்டுள்ளது. அது செவிவழக்காய் மட்டும் வழங்கிய காலத்திலேயே இங்ஙனம் மாற்றப்பட்டிருத்தல் வேண்டும். பிராமண வடிவம் கொண்டு அவருடைய மனைவியைக் கேட்கவந்த, சிவபெரு மானாகக் கருதப்படுகிறவன், உண்மையில் ஒரு மனிதனாகவே யிருந்திருத்தல் வேண்டும். மேன்மேலும் இனத்தார் எதிர்த்து வந்ததை அக் காமுகன் கண்டஞ்சி இறுதியில் ஓடி ஒளிந்திருக்க வேண்டும். இறுதியில் சிவபெருமான் காட்சி கொடுத்ததாகக் கூறுவது அடியார்க்கெல்லாம் பொதுவாகக் கூறப்படும் மங்கல முடிவு. சிவபெருமானே இயற்பகையாரின் மனைவியைக் கேட்டதாக வைத்துக் கொண்டாலும், அது முடிவிலன்றி முன்னதாகத் தெரியாமையால், சிவனடியார் வேடம் பூண்டுவந்த எவர்க்கும் தம்