உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 34.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தமிழன் எப்படிக் கெட்டான்?

85

மனைவியைக் கொடுத்திருப்பார் என்பது வெட்டவெளியாகின்றது. மேலே கூறப்பட்ட மற்ற ஈரடியார்களும் பகைவரென்று தெரிந்த பின்பும் போலிச் சிவவேடத்தாருக்கு இணங்கியமையும் இதை வலியுறுத்தும்.

சில திருப்பதிகளில் தேரோட்டக் காலத்தில் தேர்க்காலின்கீழ்த் தலையைக் கொடுத்திறப்பதும், கும்பகோணத்தில் மகாமகக் குளத்தில் மிதியுண்டு சாவதும், சில கோயில்கட்குப் பிள்ளை வரத்திற்குச் சென்று தெரிந்தோ தெரியாமலோ தம் மனைவியரைக் கற்பழிவிப்பதும் அல்லது இழப்பதும் கோவில்வழிபாட்டிற்குச் சென்றவிடத்துத் தம் அழகான அருமந்த மகளிரைத் தேவகணிகையராக விட்டுவிட்டு வருவதும், பண்டைத் தமிழருள் பகுத்தறிவற்று மானங்கெட்ட மதப்பித்தர் சிலரின் செயல்களாகும்.

இத்தகைப் பேதையரையே படிமையின் (விக்கிரகத்தின்) பின் மறைந்து நின்று தேவவாக்குப்போற் கூறி ஏமாற்றி, வேண்டியதெல்லாம் பெற்றுவந்தனர் ஒரு சாரார்.

இந்த 20ஆம் நூற்றாண்டிலுங்கூட, சில மதப்பித்தர் ஆங்கிலக் கல்வி சிறப்பப் பெற்றிருந்தும் தாய்மொழி கெட்டாலும் தமது மதம் கெடக்கூடா தென்று கருதி, வேண்டாத வடசொற்களையும் புறம்பான ஆரியக் கொள்கைகளையும் தழுவுகின்றனர். உயிரையும் மானத்தையும் வீணாய் இழக்கத் துணியும் மதப்பித்தர்க்கு இது எம்மட்டு?

மேலும், தமிழை வளர்ப்பதால் மதம் கெடப்போவதுமில்லை. தாய் மொழியையும் மதத்தையும் தூய்மைப்படுத்துவதால் அவை வளர்ந்தோங்கு மென்பதையும் தமக்குப் பெருமை உண்டாகு மென்பதையும் அவர் ஆராய்ந் தறிவதுமில்லை; ஆராய்ந்தவர் சொல்லினும் உணர்வது மில்லை. இத்தகையோர் இருப்பின் என்? இறப்பின் என்?

சிலர் மதம்பற்றிய வடசொற்கட்குத் தென்சொற்கள் இல்லை யென்றும், மதத்துறையில் வடசொற்கள் வந்துதான் ஆகவேண்டுமென்றுங் கூறுகின்றனர். இது தாய்மொழி யுணர்ச்சியும் சொல்லாராய்ச்சியும் சரித்திர அறிவும் இல்லாமையால் வந்த கேடு. மேலும், சைவ மாலியமும் (வைஷ்ணவ) அவற்றின் முதல் நூல்களும் தமிழருடையவாயும் தமிழிலும் இருக்க அல்லது இருந் திருக்க, அவை ஆரியர் கொண்டுவந்தவை யென்றும், அவற்றின் முதல் நூல்கள் வடமொழி மறைகளே யென்றுங் கொள்கின்றனர். “தம்மானை யறியாத சாதியார் உளரே!" இவர்க்கு எத்தனை மொழிநூல்கள் வெளி வந்தென்ன? எத்தனை மொகஞ்சதரோக்கள் அகழப்பட்டென்ன?

வடமொழியிற் சொற்கள் ஆனது போன்றே தமிழிலும் ஆக முடியும். ஈராயிரம் ஆண்டுகளாக வடமொழியைத் தழுவி வந்ததால் தமிழில் சொல் வளர்ச்சியில்லாது போயிற்று. இன்றும் தமிழர் சிவபெருமானுக்கும் திருமாலுக்கும் அஞ்சுவதினும் மிகுதியாகப் பார்ப்பனருக்கு அஞ்சுவதே தமிழ் வளர்ச்சிக்குத் தடையாயுள்ளது.

ஒரு நாட்டின் நாகரிக அல்லது முன்னேற்ற நிலைக்கு மதப் பொறுதியும் ஓர் அறிகுறியாகும். பண்டைக்காலத்தில், தமிழ்நாட்டில் தற்கால இங்கிலாந்திற்