உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 34.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தமிழன் எப்படிக் கெட்டான்?

87

அன்றியும் சிலர் தகுதியறிந்தும் தேவையறிந்தும் கொடை செய்வதுமில்லை. நூறு பொற்காசளிக்க வேண்டிய இடத்தில் பதினூறாயிரம் பொற்காசளிப்பதும், குடிக்கக் கஞ்சியில்லாமற் போயிரந்தவனுக்கு நூற்றுக்கணக்கான யானைகளைக் கொடுப்பதும், அவர் வழக்கம்.

இக் காலத்திலும், ஒருவன் பிறக்கு முன்பே தொடங்கி, அவன் இறந்த பின்பும், ஒரு குலத்தாருக்கே தானஞ்செய்வது தமிழரின் பேதைமை யாகும். இதனால், வடநாட்டினின்று கையுங் காலுமாய் வந்த ஒரு சிறு கூட்டத்தினர் செல்வத்தால் சிறந்து வாழ, தமிழருட் பெரும்பாலார் வறியராய் வருந்துகின்றனர். “ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை பெருஞ்செல்வம் உற்றக் கடை

(குறள் 837)

பார்ப்பனர் தாம் பெற்ற செல்வத்தைத் தம்மா லியன்றவரை தங்குலத் தாருக்கே பயன்படுத்துவது வழக்கம். இதனால் அவரிடம் செல்லும் பணம் அவர்க்குள்ளேயே சுற்றிக்கொண்டு தமிழர்க்குப் பெரிதும் பயன்படாது போகின்றது.

ஒரு பார்ப்பனர் ஒரு கொடையாளியொடு பழகப்பெறின், அவர் கொடையைப் பெரும்பாலும் பிற குலத்தார் பெறாதபடி, தங்குலத்தார்க்கே இயன்றவரை வரையறுத்துக் கொள்வது அவர் இயல்பு. சில அறநிலையங்களில், தமிழ இரவலர் (பிச்சைக்காரர்) வெளியே நின்று பட்டினியும் பசியுமாய் ஒரு கவளம் பெறாது தவிக்க, ஒரு சாரார் உள்ளேயிருந்து கொழுக்கக்கொழுக்கச் சிறந்த வுண்டிகளை உண்கின்றனர். இவற்றிற்குச் செல்லும் செலவோ

தமிழருடையவை.

பார்ப்பனருக்கே ஒன்றும் கொடுக்கக்கூடாதென்று யாம் கூறவில்லை. அவரது தந்நலத்தையும் தமிழர் நலம் பேணாமையையுமே கண்டிக்கின்றோம்.

இக்காலத்தில், தமிழ்நாட்டில் கொடையாளிகளைக் காண்பது அரிதா யிருக்கின்றது. எங்கேனும் அத்திபூத்தாற்போலும் கார்த்திகைப் பிறை கண்டாற் போலும் ஒருவர் தோன்றின், அவர் இலக்கக்கணக்காகவும் கோடிக்கணக்காக வும் ஆங்கிலக் கல்விக்கே கொட்டிக் கொடுக்கின்றவராயும், தமிழை அவமதிக்கின்றவராயு மிருக்கின்றனர். திருப்பனந்தாள் காசிமடத் தம்பிரான், திருப்பெருந்திரு காசிவாசி சுவாமிநாதத் தம்பிரான் அவர்கள் தமிழுக்காகப் பல பெரும் பரிசுகள் அளிக்கிறார்கள் என்று மகிழ்ந்திருந்தால், அவர்கள் தமிழ்ப் பகைவர்கட்கும் தமிழைப் பழிக்கும் அல்லது கெடுக்கும் புத்தகவெளியீட்டிற் காகப் பணந்தருவது மிகுந்த வருத்தத்தைத் தருகின்றது.

இந்நிலையில், செட்டிநாட்டரசர் சர் (வயவர்) அண்ணாமலைச் செட்டியார் அவர்கள் அண்மையில் தமிழிசைக்காகப் பதினையாயிரம் உருபா அளித்தது பஞ்சகாலத்துப் பெய்த பெருமழை போலிருக்கின்றது. ஆனால் இதையும் ஒருசார் பார்ப்பனர் கெடுக்கப் பார்க்கின்றனர்; ஆரியர் இந்தியாவிற் கால்வைக்கு முன்னமும், தெலுங்கில் இலக்கியம் தோன்றுமுன்னமும், தியாகராய ஐயர் பிறக்கு