உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 35.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




90

1.

2.

20ஆம் பாடம் குச்சடுக்குதல்

செந்தமிழ்க் காஞ்சி

‘பச்சைமலை பவளமலை' என்ற மெட்டு

குச்சடுக்க என்னுடனே கூடவேநீ வாராய் மச்சுவீடு கட்டிஅதில் வாழ்ந்திருக்க வாராய்

தச்சனைப்போல் சன்னல்ஒன்று தைத்திடுவோம் வாராய் மச்சுவீட்டுல் பின்னாலே வைத்திடுவோம் வாராய்

3. ஏணியொன்று செய்திடவே என்னுடனே வாராய் கோணலாகச் சார்த்தியேறிக் கூரைக்குநாம் போவோம் 4. குச்சாலே கோப்பைசெய்து கொண்டபசி தீர நிச்சமாய்ச் சாப்பிடவே நேர்மையுடன் வாராய்

5. முக்கோணம் நாற்சதுரம் முதலான வடிவம் எக்கோணம் ஆனாலும் எடுத்தடுக்க வாராய்

6. சிறப்பான பட்டமொன்று செய்தபின்னே அதையே பறக்கவிட்டுப் பார்த்திடுவோம் பக்கமாக வாராய் 7. பெட்டிஒன்று பெரிதாகச் செய்திடுவோம் வாராய் தட்டுமுட்டை அதில்வைக்கத் தானிங்கே வாராய்

8. கிளிக்கூடு கட்டியதில் கிளியை வைப்போம் தம்பி வெளிக்கோட வழியில்லாமல் நெருக்கிவைப்போம் கம்பி

21ஆம் பாடம்

களிமண் வேலை

‘தந்தம் தந்தம் தந்தினனா' என்ற மெட்டு

1. களிமண் எடுத்துக் கையில் வைத்து

களியாய்ப் பிசைந்தே கல் எடுத்தேன்

2. குசவன் போலே நீரைவிட்டு

வசமாய்க் குழைத்து வைத்தேன் பார்

3. தட்டை யாக்கி மேலெழுப்பித் தட்டி வளைத்தேன் சுற்றெல்லாம்