உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 35.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சிறுவர் பாடல் திரட்டு

4. வாயும் மேலே சுருக்கி வைத்தேன்

காயும் முன்னால் திருத்தி விட்டேன் 5. மேடு பள்ளம் இல்லாமல்

ஓடும் எடுத்துத் தட்டிவைத்தேன்

6. குடமும் ஒன்று வந்ததுபார் சுடுவேன் இன்று சூளையிலே

7.

கழுத்தும் வாயும் விரிவானால் அழுத்தமான பானை சட்டி

8. குருட்டுப் பிடியாய்க் கைமண்ணை உருட்டிச் செய்தேன் ஒருமிளகாய்

9. கிண்ணம் செய்து காம்பு வைத்தால் நண்ணி வருமே நல்லகப்பை.

22ஆம் பாடம்

முத்தடுக்கல்

‘பச்சைமலை பவளமலை' என்ற மெட்டு. குறத்திப்பாட்டுப் போல் பாடவேண்டும்.

1. குன்றிமுத்து, புளியமுத்து, இலுப்பைமுத்து இன்னும் குறுக்குமுத்து, வேப்பமுத்து, ஆமணக்கு முத்து

2.

3.

91

வெள்ளைக்குன்றி முத்தெடுத்து வெள்ளிக்கிண்ணம் வைத்து கருப்புக்குன்றி முத்தெடுத்து கருப்புக்கிண்ணம் வைப்பாய்

சிவப்புக்குன்றி முத்தெடுத்துச் சிவப்புமுட்டை போடு

சிவப்புமுட்டை பார்த்திருக்க மாட்டாய் சின்னத் தம்பி!

4.

ஆமணக்கு முத்தெடுத்து அ ஆ வை எழுது பூமணக்கும் புளியமுத்தால் பு பூ வை எழுது

5.

குறுக்குமுத்தை எடுத்தேஒரு குறுங்கட்டில் போடு நெருக்கமாக இலுப்பை முத்தால் நேர்கோடு போடு 6. நாய்வேம்பு முத்தெடுத்து நாற்கோணம் வரைவாய் நல்லவேம்பு முத்தெடுத்து நாற்காலி வரைவாய்.