உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 35.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




92

செந்தமிழ்க் காஞ்சி

23ஆம் பாடம் பாய் முடைதல்

‘கத்தரிக்காய் கொண்டுவா' என்ற மெட்டு

ப.

காகிதப்பாய் முடைவோம் - கருத்துடன் நாம் காகிகப்பாய் முடைவோம்.

1. காகிதத்தை மடித்துக் கத்தரியைப் பிடித்து காகிதத்தின் நடுவில் கால்விட் டரிந்து

(காகிதப்)

2. மூங்கிலில் ஈக்கறுத்து முனியைப் பிளந்து சீவி

பாங்குடன் சல்லித்தாளைப் பையப் பொருத்தி

(காகிதப்)

3. ஈக்கைப் பிடித்துத் தாளின் இழையை நீக்கிச் செலுத்தி

தூக்கியே முறைதோறும் நுட்பமாகவே

(காகிதப்)

4. ஓரிழை தள்ளிப் பின்ன ஒழுங்கான ஓலைப்பாயாம்

ஈரிழை தள்ளினாலோ இது மூங்கிற்பாய்

(காகிதப்)

5. நேராய் இழைஇருத்தி செய்வது கோரைப் பாய்தான் மாறாகச் சாய்ந்திருப்பின் மற்றப் பாய்களாம்

(காகிதப்)

1.

24ஆம் பாடம்

கண்ணாம்பூச்சி

விளையாட அழைத்தல்

என்னருமைப் பெண்களே இந்தவேளை தன்னிலே கண்ணாம்பூச்சி யாடவே களிப்புடனே வாருங்கள்.

பிள்ளைகள் ஒளிதல்

பெண்களே நீர்எல்லாம் பேசாது ஒளிந்திருங்கள் கண்ணம்மாளே வாஉன் கண்ணைமூடு கின்றேன் கண்ணை மூடுதல்

2. கண்ணாம்பூச்சி யாரே கண்ணாம்பூச்சி யாரே

எண்ணாமல் சொல்பழங்கள் எத்தனைதான் பறித்தாய்?